தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ..

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் தனுஷின் நண்பர்கள் பலர் தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 17, 2024, 10:54 AM IST
  • தொடர்ச்சியாக விவாகரத்து பெற்ற தனுஷின் நண்பர்கள்
  • ஜிவி பிரகாஷ் சைந்தவியின் சமீபத்திய விவகாரம்..
  • நீளும் லிஸ்ட்
தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ.. title=

கோலிவுட் திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் பலர், தொடர்ச்சியாக தங்களது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஆகியோர் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ள தகவல் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து, தனுஷின் நண்பர்கள் பலர் தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வருவது குறித்த விவாதமும் இணையத்தில் எழுந்திருக்கிறது.

தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து..

நடிகர் தனுஷும், இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பிரிவை அறிவித்தனர். இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பரஸ்பர விவாகரத்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், தங்களது இரு பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்காவை கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர். 

செல்வராகவன்-சோனியா அகர்வால்..

தனுஷின் அண்ணன் செல்வராகவன், தனது முதலாம் மனைவி சோனியா அகர்வாலை 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். காதல் திருமணமான இது, 2006ஆம் ஆண்டு நடைப்பெற்றது. செல்வராகவனின் இரண்டு படங்களில் நாயகியாக நடித்த சோனியா அகர்வால், அவருடன் ஏற்பட்ட 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்தார். செல்வராகவன் தற்போது கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். 

டிடி-ஸ்ரீகாந்த் 

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி (திவ்யதர்ஷினி), 2014ஆம் ஆண்டு தனது சிறுவயது நண்பரும் காதலருமான ஸ்ரீகாந்தை திருமணம் செய்தார். இவர், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் பல திரையுலக செலிப்ரிட்டிகளுக்கு நெருக்கமான நண்பராக இருந்தார். அதில் ஒருவர் தனுஷ். 2017ஆம் ஆண்டு சுசி லீக்ஸில் டிடியின் பிரைவேட் புகைப்படம் ஒன்று வெளியானது. அதே ஆண்டு தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்திலும் டிடி நடித்திருந்தார். இதையடுத்து இவருக்கும் விவாகரத்து நடந்தது. 

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

சமந்தா-நாகசைதன்யா..

நடிகை சமந்தாவும் தனுஷும் 2015ஆம் ஆண்டு தங்கமகன் படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து இவர்கள் நல்ல நண்பர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 2021ஆம் ஆண்டில் அவருடனான உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் விவாகரத்து பெற்றனர். 

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி..

தனுஷின் நண்பர்களுள் ஒருவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், தன்னுடைய சிறு வயது தோழி மற்றும் காதலியான சைந்தவியை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை இருக்கிறது. 22 வருட காதலுக்கு பிறகு, இவர்கள் தற்போது பிரிவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றனர். இதையடுத்து, இந்த விவாகரத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர். 

இவர்களை தவிர அமலா பால்-ஏ.எல்.விஜய், கார்த்திக் குமார்-ஆர்.ஜே.சுசித்ரா உள்ளிட்ட பலரும் லிஸ்டில் இருக்கின்றனர். 

தனுஷிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 

நடிகர் தனுஷை சுற்றி இந்த விவாகரத்து சர்ச்சை மிக நீண்ட காலங்களாக சுழன்று கொண்டிருக்கின்றன. இவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் யார் விவாகரத்து வாங்கினாலும் அதற்கு தனுஷ் காரணமாக இருப்பாரோ என பலர் பல்கூசாமல் பேசி வருகின்றனர். ஆனால் இதை அனைத்தையும் காதில் வாங்காத தனுஷ், இந்த சர்ச்சைகள் குறித்து எதுவும் பேசாமல் இருந்து வருகிறார். 

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் எக்கச்சக்க புது வரவுகள்..மிஸ் பண்ணாம பாத்துருங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News