இலங்கை அரசின் புதிய ஆயுதம்! இணையதளத்திற்கு கட்டுப்பாடு விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

Online Safety Act Of Srilanka: இலங்கையில் இணைதளப் பதிவுகளுக்குக் கட்டுப்பாட்டு விதிக்கும் சட்டத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் வழங்கியது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 2, 2024, 05:46 PM IST
  • இணைதளப் பதிவுகளுக்குக் கட்டுப்பாட்டு
  • இலங்கையில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
  • இலங்கை நாடாளுமன்றத்தின் இறுதி ஒப்புதல் கிடைத்தது
இலங்கை அரசின் புதிய ஆயுதம்! இணையதளத்திற்கு கட்டுப்பாடு விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்! title=

Law To Regulate Social Media Content: இலங்கையில் இணைதளப் பதிவுகளுக்குக் கட்டுப்பாட்டு விதிக்கும் சட்டத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் வரைவுச்சட்டம், சட்டமானது. இது அந்நாட்டு அரசின் ஆயுதக் களஞ்சியத்தில் புதிய ஆயுதம் என்றும், இது பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும், அரசின் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்வதை தடுக்கவும் பயன்படும் என்றும் கூறப்படுகிறது. 

இணைய உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் கடுமையான சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டதாக உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், "தடைசெய்யப்பட்ட" கருத்துக்களை மதிப்பிடுவதற்கும் அகற்றுவதற்கும் அரசுக்கு ‘வானளாவிய’ அதிகாரங்களை வழங்குகிறது.

இந்த சட்டம் சைபர் கிரைமை எதிர்த்துப் போராட உதவும் என்று அதிகாரிகள் கூறினாலும், தேர்தலுக்கு முன்னதாக மக்களின் கருத்துக்களையும், கருத்து வேறுபாடுகளையும், அரசு மீதான விமர்சனங்களையும் அடக்குவதற்கான ஆயுதம் என்று பலரும் விமர்சிக்கின்றனர். 

பொருளாதார பிரச்சனை என்ற பெரும் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் 2022இல் பிரச்சனைகள் வெடித்தபோது ஏற்பட்ட நெருக்கடி ஏற்பட்ட போது, அன்றைய அதிபரை பதவி நீக்கம் செய்ய மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு சமூக ஊடகப் பதிவுகளும், வீடியோக்களும் காரணம், அதாவது இணையதளத்தை மக்களால் இலகுவாக அணுக முடிந்ததே காரணம் என்பதால், தற்போது கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.

மேலும் படிக்க | மத்திய அமைச்சர்கள் ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள்... வரும் மார்ச் வரை - ஏன் தெரியுமா?

தற்போது இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டம், 108-62 வாக்குகளால் ஜனவரி 24 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, இலங்கை நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டங்கள் வெடித்தன. இருந்தபோதிலும், இலங்கை அதிபர் ஒப்புதல் அளித்ததை அடுத்து ஆன்லைன் கட்டுப்பாடு சட்டம் நேற்று (2024, பிப்ரவரி 1) முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த புதிய சட்டம் "இலங்கையில் நடந்த சம்பவங்கள் பற்றிய தவறான அறிக்கைகள்", "மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம்" தொடர்பான செயல்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்களை தவறாஅக பயன்படுத்துவது ஆகியவற்றை  தடை செய்கிறது.

அதிபரால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவிற்கு இந்த அறிக்கைகளை மதிப்பிடுவதற்கும், அவற்றை நீக்குவதற்கு வழிகாட்டுவதற்கும், தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரங்களும் உண்டு. இந்த சட்டம் சமூக ஊடக தளங்களில் உள்ள செய்திகளுக்கு, அந்த குறிப்பிட்ட சமூக தளங்களையும் பொறுப்பாக்குகிறது. 

நாடாளுமன்றத்தில் சட்ட வரைவை அறிமுகப்படுத்திய போது, ஆன்லைன் மோசடி மற்றும் தேசத்தின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அறிக்கைகளுடன் தொடர்புடைய குற்றங்களைச் சமாளிப்பது அவசியம் என்று இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டன! அதிர்ச்சியளிக்கும் 203% வரை கட்டண உயர்வு

கடந்த ஆண்டு மட்டும் சைபர் கிரைம் தொடர்பான 8,000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

83 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான கடன் இர்நுத நிலையில், 2022 ஏப்ரலில் இலங்கை திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இலங்கையிஒல் உணவு விலைகள் மற்றும் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சத்தை எட்டியதை அடுத்து, மக்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்குள் நுழைந்து முற்றுகையிட்டனர்.
நிலைமை மோசமடைந்த நிலையில், வேறு வழியின்றி, பதவி விலகிய இலங்கை அதிபர் ராஜபக்ச  நாட்டை விட்டு வெளியேறினார்.

புதிய சட்டத்தின் விதிகள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றும், ஆன்லைனில் கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டமாக இது இருப்பதாகவும் உரிமைகள் குழுவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தும் இந்த சட்டம், வரைவு சட்டமாக முன்மொழியப்பட்டபோதே, பல கவலைகள் எழுப்பப்பட்டன. இந்தச் சட்டம், அதிகாரிகளுக்கு அளப்பறிய அதிகாரத்தைத் தருவதுடன், தவறான போக்கை ஏற்படுத்தும் என்று விமர்சனங்கள் வருகின்றன.  

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில்  அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கொரியர்களின் பாட்டி இராமருக்கு பேத்தி! கொரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அயோத்தி இளவரசி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News