இந்தியக் குழந்தை அரிஹாவை ஜெர்மன் அரசே வளர்க்கும்! பெற்றோர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு

Baby Ariha Case vs Germany: பெரும் ஆவலுடன் தங்கள் குழந்தையுடன் சேர்வோம் என காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், இந்தியக் குழந்தை அரிஹாவை வளர்க்கும் பொறுப்பை பெர்லின் நீதிமன்றம் ஜெர்மன் அரசுக்கு வழங்கியது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2023, 02:33 PM IST
  • இந்தியக் குழந்தை அரிஹாவை வளர்க்கும் பொறுப்பு ஜெர்மன் அரசுக்கு மட்டுமே
  • பெர்லின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • அரிஹாவின் பெற்றோரின் உரிமைக்கோரலை நிராகரித்த நீதிமன்றம்
இந்தியக் குழந்தை அரிஹாவை ஜெர்மன் அரசே வளர்க்கும்! பெற்றோர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு title=

இந்தியக் குழந்தை அரிஹாவை வளர்க்கும் பொறுப்பு ஜெர்மன் அரசுக்கு வழங்கப்பட்டது. தங்கள் குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிய இந்திய பெற்றோர்களின் உரிமை நிராகரித்த பெர்லின் நீதிமன்றம், "குழந்தையின் நலன்" கருதி, ஜெர்மன் அரசிடம் குழந்தை ஒப்படைப்பதாக தீர்ப்பு வழங்கியது. 

தங்கள் குழந்தையின் காயம் தற்செயலானது என்ற பெற்றோரின் கூற்றை நிராகரித்த பெர்லின் நீதிமன்றம், இந்தியக் குழந்தை அரிஹாவின் காவலை ஜெர்மனி அரசுக்கு வழங்குவதாக வெள்ளிக்கிழமை (2023, ஜூன் 16) தீர்ப்பளித்தது.  

குழந்தை அரிஹா காவல் வழக்கு: பெற்றோரின் எதிர்வினை
பெர்லின் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அரிஹாவின் பெற்றோர்கள் வருத்தமடைந்தாலும், இந்திய அரசு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தங்கள் குழந்தையை மீட்டுத் தருவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டனர். 

வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் முயற்சி எடுத்து, தங்கள் குழந்தை அரிஹாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கு முயற்சி எடுப்பார்கள் என நம்புவதாக குழந்தை அரிஹாவின் பெற்றோர் பாவேஷ் ஷா - தாரா ஷா அறிக்கை வெளியிட்டனர்.

"இன்று முதல், இந்தியாவின் 1.4 பில்லியன் குடிமக்களுக்கு குழந்தை என அரிஹாவை நாங்கள் ஒப்படைக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி... காவலில் எடுக்க உத்தரவு - நீதிபதி அதிரடி!

தாய் தாரா ஷா, தனது இரண்டரை வயது மகள் அரிஹாவை தன்னுடனேயே வைத்து வளர்க்க ஆசைப்படுகிறார். ஜெர்மனி அரசாங்கம் அரிஹாவை கடந்த ஒன்றரை வருடங்களாக பெர்லினில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைத்துள்ளது.

அரிஹாவின் தாய் தாராவும், தந்தை பாவேஷ் ஷாவும் அவளைத் திரும்ப அழைத்து வருவதற்கு மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு வருடங்களாக அவளை மீட்கும் முயற்சிகள் எந்த வித பயனையும் அளிக்கவில்லை.

அரிஹா ஏன் பெற்றோரிடமிருந்து பிரிந்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறாள்? உண்மையில் என்ன நடந்தது?

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தைச் சேர்ந்த பாவேஷ் ஷா என்பவர் தனது மனைவி தாராவுடன் ஜெர்மனியில் வசித்துவந்தார். அங்கு தொழில் செய்து வந்த தம்பதிகளின் குழந்தை தான் அரிஹா.

 7 மாத குழந்தையாக இருந்த அரிஹாவிற்கு பிறப்புறுப்பில் ரத்தம் கசிந்ததால், மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சையளித்தார்கள் பெற்றோர். மீண்டும் அடுத்த நாள், அதே பிரச்சனை தொடர்ந்ததால், பச்சிளம் குழந்தையை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர் அறிவுறுத்தினார்.

மருத்துவரின் பரிந்துரையின்படி, அரிஹா பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை அரிஹா, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிவித்ததுடன், சட்டப்படி அவர், குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கும் அவர் தகவல் அளித்தார்.

அதையடுத்து, குழந்தை அரிஹா பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, அரசிம் குழந்தை நல காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது. பாவேஷ் மற்றும் தாரா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் எம்ஜிஆர் - போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு!

இந்த பிரச்சனை, அரிஹாவின் பெற்றோருக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியது. அதிலும், ஜெர்மானிய மொழி தெரியாத நிலையில், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசவும் அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மொழி பெயர்ப்பாளர் மூலம் பிரச்சினை குறித்து தெளிவாகப் புரியவைக்க முயன்றாலும் அரிஹாவை அவர்கள் வீட்டுக்கு அழைத்துவர முடியவில்லை.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு அரிஹா எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு ஒரு வயதாகியிருந்த தங்கள் குழந்தை அரிஹாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்ற பெற்றோரின் நம்பிக்கை தற்போது பொய்த்துவிட்டது.

குழந்தையின் காவல் ஜெர்மன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டதுடன்,  குழந்தையின் காயம் தற்செயலானது என்ற பெற்றோரின் கூற்றை பெர்லின் நீதிமன்றம்நிராகரித்துவிட்டது.

பெற்றோரிடம் இருந்து குழந்தையை பறிமுதல் செய்த பிறகு, அவர்கள் மீது தவறில்லை, குழந்தையின் காயம் தற்செயலானது என்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், ஜெர்மன் நாட்டுச் சட்டத்தின்படி, தாரா மற்றும் பாவேஷ் ஆகியோர், 'பெற்றோர் திறன்' அறிக்கையை அளித்தால் மட்டுமே அரிஹாவை அவர்களிடம் ஒப்படைக்கமுடியும்.

மேலும் படிக்க | பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் - விஜய்

இதற்காக, பாவேஷும், தாராவும் ஓராண்டுக்கு மேற்கொள்ளவேண்டிய செயல்முறைகள் அனைத்தையும் செய்து முடித்த நிலையில், தற்போது அவர்களுக்கு குழந்தை அரிஹா கிடைக்கமாட்டாள் என்று பெர்லின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

பெற்றோரின் திறன் அறிக்கையில், அரிஹா நீண்ட காலத்துக்குப் பெற்றோர்களைப் பிரிந்திருந்தாலும், அவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதாகவும், பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டால் அவள் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் விசித்திரமான விஷயம் என்ன தெரியுமா? குழந்தை அனைவரிடமும் எளிதில் நெருங்கிப் பழகுவதால் அவளுக்கு 'அட்டாச்மென்ட் டிஸ்ஆர்டர்' என்ற மனநலக் குறைபாடு இருப்பதாக மருத்துவர் சான்றளித்துள்ளார்களாம்! 

“இந்தியக் கலாசாரப்படி குழந்தைகள், சிறு வயதில் இருந்தே குடும்பம், உறவினர்களுடன் நெருங்கி வாழப் பழகிவிடுகின்றனர். இதை 'அட்டாச்மென்ட் டிஸ்ஆர்டர்' என ஒரு மனநலக் குறைபாடாக அந்நாட்டு சட்டங்கள் பார்க்கின்றன என்று அரிஹாவின் தாய் தாரா ஷா வேதனைப்படுகிறார். இதுபோல், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை மாறியிருக்கும் சூழ்நிலையில் உள்ள சட்டங்கள், வெளிநாட்டில் குடியேறுபவர்களுக்கு சுமையாகிவிடுகிறது என்று அவர் கூறுகிறார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News