ஏசி, கூலர், வாஷிங் மெஷின் வாங்க சூப்பர் நேரம்: பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி

Flipkart Big Savings Days Sale: நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், கூலர் அல்லது ஏசி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2023, 11:13 AM IST
  • தாம்சன் ஸ்மார்ட் டிவி -களில் 32 இன்ச் முதல் 75 இன்ச் வரையிலான ஸ்மார்ட் டிவிகளுக்கு ஃப்ளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
  • தாம்சனின் ஸ்மார்ட் டிவிகள் பிக் சேவிங் டேஸ் சேலில் ரூ.6,499 முதல் ரூ.79,999 வரை கிடைக்கும்.
  • நிறுவனம் 75 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 46% தள்ளுபடி வழங்குகிறது.
ஏசி, கூலர், வாஷிங் மெஷின் வாங்க சூப்பர் நேரம்: பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி title=

Flipkart Big Savings Days Sale: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! இந்த கொளுத்தும் வெயிலில் இது உங்களுக்கு ஒரு கூலான செய்தியாக இருக்கும். நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், கூலர் அல்லது ஏசி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பொருட்களில் தற்போது தாம்சன் சிறந்த தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஃப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Savings Days Sale) தொடங்கியுள்ளது. இதன் மூலம் மிக மலிவான விலையில் இந்த பொருட்களை வாங்கலாம். பிளிப்கார்ட் வழங்கும் இந்த அற்புதமான சலுகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

பிளிப்கார்ட் விற்பனை: பழம்பெரும் மின்னணு உற்பத்தியாளர் தாம்சன் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் சமீபத்திய தள்ளுபடி சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃப்ளிப்கார்ட் பிக் டேஸ் சேவிங் சேலில், தாம்சனின் ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், கூலர் அல்லது ஏசி போன்றவற்றை மிக மலிவான விலையில் வாங்கலாம். 

Thomson Smart TV: 

தாம்சன் ஸ்மார்ட் டிவி -களில் 32 இன்ச் முதல் 75 இன்ச் வரையிலான ஸ்மார்ட் டிவிகளுக்கு ஃப்ளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. தாம்சனின் ஸ்மார்ட் டிவிகள் பிக் சேவிங் டேஸ் சேலில் ரூ.6,499 முதல் ரூ.79,999 வரை கிடைக்கும். நிறுவனம் 75 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 46% தள்ளுபடி வழங்குகிறது.

மேலும் படிக்க | Netflix, Amazon Prime வீடியோக்களை இலவசமாக பார்க்கணுமா? இத மட்டும் பண்ணுங்க!

Thomson Cooler: 

தாம்சன் நிறுவனம் சமீபத்தில் புதிய ஏர் கூலர்களை அறிமுகப்படுத்தியது. இதில் பர்சனல், விண்டோ மற்றும் டெசர்ட் ஆகிய கூலர்கள் அடங்கும். இந்த ஏர் கூலர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தள்ளுபடிகளுக்குப் பிறகு இந்த ஏர் கூலர்களை ரூ. 4,999 முதல் ரூ. 8,199 வரை வாங்க முடியும். 

Thomson Air Conditioner (AC): 

1 முதல் 1.5 டன் திறன் கொண்ட தாம்சன் தாம்சன் ஏர் கண்டிஷனர் ஏசிகள் இந்த கோடையில் சிறந்த குளிர்ச்சியை அளிக்கும். தள்ளுபடிக்குப் பிறகு இந்த உயர்தர ஏசி -யின் ஆரம்ப விலை ரூ. 27,999 ஆகவும், அதிக பிரீமியம் ஏசியின் தள்ளுபடி விலை ரூ. 42,999 ஆகவும் உள்ளது.

Thomson Washing Machine: 

வீட்டு உபயோக பொருட்களில் மிக முக்கியமானவை வாஷிங் மெஷின்கள். தாம்சன் வாஷிங் மெஷின்களிலும் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். 9 கிலோ முதல் 12 கிலோ எடையுள்ள வாஷிங் மெஷின்களை, பிளிப்கார்ட்டின் இந்த சேலில் ரூ. 9,499 முதல் ரூ.12,999 என்ற விலையில் வாங்கலாம். 

கூடுதல் தகவல்:

பிளிப்கார்ட் ஸ்ப்ளிட் ஏசி சலுகை:

ஸ்பிலிட் ஏசி பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டில் பிராண்டட் ஏசிகளை வாங்குவதில் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறார்கள். வாடிக்கையாளர்கள் Samsung Convertible 5 in 1 Cooling 2023 1.5 Ton Split மாடலை Flipkart-லிருந்து 41% தள்ளுபடியில் வீட்டிற்குக் கொண்டு வரலாம். இந்த ஏசியை ரூ.60,999-க்கு பதிலாக வெறும் ரூ.35,500க்கு வாங்கிச் செல்லலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.4,500 தள்ளுபடியையும் பெறலாம். இந்த ஏசி 977.8W மின் நுகர்வுடன் வருகிறது. 111 முதல் 150 சதுர அடி வரையிலான அறைகளுக்கு சரியானது. 

மேலும் படிக்க | Poco F5 5G Review: பட்ஜெட் விலையில் ஒரு சூப்பரான ஸ்மார்ட்போன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News