நமது வீட்டில் உள்ள பிரிஜ்ட்ஜை சுத்தம் செய்வது எப்படி? எளிதான வழிகள் இதோ!

How to Clean Refrigerator: நமது வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் பின்னாளில் பெரிய செலவுகளை ஏற்படுத்தலாம்.  

Written by - RK Spark | Last Updated : Feb 25, 2024, 06:59 AM IST
  • பிரிஜ்ட்ஜை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
  • அழுக்கு படிந்தால் உணவு பொருட்கள் கெட்டுவிடும்.
  • மேலும் அதிக செலவுகளை வைக்க வாய்ப்புள்ளது.
நமது வீட்டில் உள்ள பிரிஜ்ட்ஜை சுத்தம் செய்வது எப்படி? எளிதான வழிகள் இதோ! title=

How to Clean Refrigerator: தற்போது குளிர்சாதன பெட்டி என்பது அனைவரது வீட்டிலும் முக்கியமான ஒரு பொருளாக மாறியுள்ளது.  உணவுகளை கெட்டுப்போகாமல் புத்துணர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.  உணவுப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நாட்கள் புதியதாக இருக்கும். நீங்கள் அவற்றை வெளியே எடுத்து பின்னர் சாப்பிடலாம். ஆனால், தினசரி பயன்படுத்தப்படும் இந்த குளிர்சாதன பெட்டியில் அழுக்கு, உணவு துண்டுகள் மற்றும் கறைகள் குவிய அதிக வாய்ப்புள்ளது. குளிர்சாதனப்பெட்டியில் சேரும் அழுக்கு உணவுப் பொருட்களைக் கேட்டு போக வைப்பது மட்டுமல்லாமல், அதிக மின்சாரத்தையும் எடுத்துக்கொள்ளும். எனவே குளிர்சாதன பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.

மேலும் படிக்க | கார் வாங்க பணம் இல்லையா? இந்த வங்கி 100% கார் கடன் வழங்குகிறது!

நமது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை சுத்தமாக வைக்கவில்லை என்றால், அதில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் எளிதில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இதனால் உடல் நலத்திற்கு கேடுகளும் ஏற்படும்.  வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் நீங்களே உங்களின் குளிர்சாதனப்பெட்டியை சுத்தம் செய்து கொள்ளலாம், மேலும் சர்வீஸ் செய்வதற்கான பணத்தையும் மிச்சப்படுத்தலாம். குளிர்சாதன பெட்டியை எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வது எப்படி?

- குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்வதற்கு முன், அதை மின்சாரத்தில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கும் அல்லது குளிர்சாதன பெட்டிக்கும் எந்த வித தீங்கும் ஏற்படாது. இதற்குப் பிறகு, குளிர்சாதன பெட்டியின் உள்ளே அனைத்து உணவு பொருட்களையும் வெளியேற்றவும். இது சுத்தம் செய்வதை எளிதாக மாற்றும்.  பிறகு குளிர்சாதன பெட்டியில் ஏதேனும் அழுக்கு படிந்து இருந்தால், அதனை சுத்தம் செய்யவும். குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தலாம்.

- குளிர்சாதனப் பெட்டியின் உட்புறம் மற்றும் வெளிப்புற மேற்பரப்பை வெதுவெதுப்பான நீர் மற்றும் பேக்கிங் சோடா கரைசலைக் கொண்டு சுத்தம் செய்தால் புதிது போன்று பளபளப்பாக மாறும். மேலும் குளிர்சாதன பெட்டியின் உட்புறத்தை சுத்தம் செய்ய மென்மையான துணி அல்லது கடற்பாசி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

- குளிர்சாதன பெட்டியில் உள்ள தட்டு மற்றும் ரேக்கை தனியாக கழட்டி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.  அதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய எலுமிச்சையை பயன்படுத்தலாம். எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அழுக்குகளில் தேய்க்கவும். எலுமிச்சை குளிர்சாதன பெட்டியில் உள்ள துர்நாற்றத்தை அகற்ற உதவுகிறது.  நன்றாக துடைத்த பிறகு மீண்டும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | பேச்சிலர் பசங்களுக்கு வரப்பிரசாதம்... கம்மி விலையில் ஜம்முனு வாஷிங் மெஷின் - நல்ல டீல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News