ஏசி பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் அதிகரிக்கிறதா? இத பாலோ பண்ணுங்க!

ஏசிகள் மூலம் அதிகரித்து வரும் மின்சார கட்டணத்தை குறைக்கவும், ஏசிகளின் ஆற்றலை அதிகரிக்கவும் சில எளிய வழிகளை பின்பற்ற வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : May 27, 2023, 10:35 AM IST
  • ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை கொடுக்கும்.
  • ஏசி ஃபில்டர்களை ஒவ்வொரு மாதமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
  • ஏசி வாங்கும்போது 4-5 நட்சத்திர மதிப்பீடுகளை கொண்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்
ஏசி பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் அதிகரிக்கிறதா? இத பாலோ பண்ணுங்க! title=

1) ஏசி வெப்பநிலையை குறைவாக அமைப்பதன் மூலம் அறையை வேகமாக குளிர்விக்க ஏசி அனுமதிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர், ஆனால் அது அப்படியில்லை.  பொதுவாக 24 டிகிரி என்பது மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை.  எனவே உங்கள் ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்திருப்பது உங்கள் அறையை வசதியாக மாற்றுவது மட்டுமல்லாமல், ஏசியின் சுமையையும் குறைக்கும்.  இதனால் உங்கள் ஏசி ஆற்றல் மிகுந்ததாகவும், குறைந்த மின்சார சக்தியைப் பயன்படுத்துவதாகவும் இருக்கிறது. 

2) ஏசி பராமரிப்பு மற்றும் மேலாண்மை இயந்திரத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தவும், பணத்தை சேமிக்கவும் உதவுகிறது.  உங்கள் ஏசியின் செயல்திறனை மேம்படுத்த, கோடைகாலத்தில் தொடக்கத்தில் உங்கள் ஏசியின் வழக்கமான சேவையை திட்டமிட வேண்டும்.  நீங்கள் இயந்திரத்தை வாங்கிய நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை அடிக்கடி அழைத்து பரிசோதித்து கொள்வது நல்லது.  

3) ஏசி சர்வீஸிங் ஒரு சீசனில் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்வது ஒருபுறமிருந்தாலும், ஏசி ஃபில்டர்களை ஒவ்வொரு மாதமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.  அனைத்து மாசு மற்றும் தூசி காற்று ஏசி ஃபில்டர்களை அடைத்து, இயந்திரத்தின் குளிர்விக்கும் செயல்முறையை கடினமாக்குகிறது.  எனவே, உங்கள் ஏசி ஃபில்டரை அடிக்கடி தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள் மற்றும் அடிக்கடி கம்பரசரையும் சுத்தம் செய்ய வேண்டும்.  

மேலும் படிக்க | விற்பனையில் சரித்திரம் படைத்த ஐபோனை வெறும் ரூ. 9,140-க்கு வாங்குவது எப்படி?

4) உங்கள் ஏசியின் செயல்திறனை அதிகரிக்க, குளிர்ந்த காற்று வெளியே நழுவாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் நன்கு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.  

5) அறையில் குளிர்ந்த காற்று சுழற்சி மற்றும் குளிரூட்டும் வேகத்தை அதிகரிக்க ஏசியுடன் உங்கள் சீலிங் ஃபேனையும் சேர்த்து இயக்கலாம்.  மின்விசிறிகளை மிதமான வேகத்தில் இயக்குவது குளிர்ந்த காற்றை அறை முழுவதும் திறம்பட விநியோகிக்க உதவுகிறது. 

6) ஏசி யூனிட்டில் உள்ள பல்வேறு முறைகளை சரியாக பார்க்க வேண்டும்.  பல நவீன ஏசிகள் 80 சதவிகிதம், 60 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் திறன் போன்ற பல்வேறு முறைகளை வழங்குகின்றன, இவை மின்சார பயன்பாட்டைக் குறைக்கும்.  உங்கள் அறை மற்றும் காலநிலைகளுக்கு ஏற்ப இதனை நீங்கள் தீர்மானிக்கலாம்.

7) பெரும்பாலான ஏசிகளில் உள்ளமைக்கப்பட்ட டைமர் உள்ளது.  நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன் டைமரை அமைக்கும்போது, அறை போதுமான அளவு குளிர்ந்தவுடன் 1 அல்லது 2 மணிநேரம் கழித்து ஏசி தானாகவே அணைக்கப்பட்டுவிடும்.  இதனால் இரவில் மின்சாரப் பயன்பாடு குறையும், நன்றாக தூங்கி கொண்டிருக்கும்போது இடையில் எழுந்து அணைக்க வேண்டிய தேவையும் இருக்காது.

8) ப்ரோக்ராமபுல் தெர்மோஸ்டாட் அன்றைய தினத்தின் வெவ்வேறு நேரங்களுக்கு, வெவ்வேறு வெப்பநிலைகளை அமைக்க உங்களை அனுமதிக்கிறது.  நீங்கள் தூங்கும்போது அல்லது வெளியில் இருக்கும்போது குளிர்ச்சியைக் குறைப்பதன் மூலம் இது ஆற்றலைச் சேமிக்க உதவுகிறது. 

9) உங்கள் ஏசி பழையதாகவும், சரியாகவும் இயங்காவிட்டால் அதனை அப்க்ரேட் செய்ய வேண்டிய நேரம் இது.  புதிய ஏசி யூனிட்கள் அதிக ஆற்றல் திறன் கொண்டவையாகவும், உங்கள் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருக்கிறது.  ஏசி வாங்கும்போது அவை 4-5 நட்சத்திர மதிப்பீடுகளை கொண்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும், ஏனெனில் அவை அதிக ஆற்றல் திறன் கொண்டவை.  

10) ஏசியை நீங்கள் பயன்படுத்தாதபோது அதை முழுவதுமாக அணைக்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும். ரிமோட் கண்ட்ரோலை மட்டும் எப்போதும் நம்பிக்கொண்டிருக்க வேண்டாம், மின்சாரத்தை வீணாக்கக்கூடிய செயலற்ற சுமைகளை அகற்ற மெயின் சுவிட்சில் இருந்து நீங்கள் அணைக்க வேண்டும்.

மேலும் படிக்க | டிவிட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் வரும் புது அம்சம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News