மரபு வழி நெல் ரகங்களில் விதைகளுக்கு பயிரிடும் விருத்தாசலம் விவசாயி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த எறுமனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 13, 2024, 10:02 AM IST
  • 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி.
  • தற்காலத்தில் உணவு முறை நம்மை வாழ்நாள் நோயாளிகளாக மாற்றி விட்டது.
  • நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என வாழ்ந்து வந்தனர்.
மரபு வழி நெல் ரகங்களில் விதைகளுக்கு பயிரிடும் விருத்தாசலம் விவசாயி title=

27 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த எறுமனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

தற்கால மனிதர்கள் பெரும்பாலோனோருக்கு சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு நாம் உண்ணும் உணவு முறையே முக்கியமான காரணமாகும். இரசாயன உரங்கள் பயன்படுத்துவதாலும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை உணவுகளை உண்ணுவதாலும் நீரிழிவு மட்டுமல்லாது பல்வேறு வாழ்நாள் நோய்களுக்கும் ஆட்பட வேண்டியிருக்கிறது. 

மேலும் படிக்க | பாஜகவுக்கு தமிழக மக்கள் மீண்டும் பூஜ்யத்தையே தருவார்கள்: எம்பி மாணிக்கம் தாகூர்! 

மனிதர்கள் ஆரோக்கியமான உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வதற்கு இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்தி, நமது பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் விவசாயி கோவிந்தராஜ் முழுக்க முழுக்க இயற்கை வழிகளான உரங்களை பயன்படுத்தி மாப்பிள்ளை சம்பா, சீரகச்சம்பா ஆத்தூர் கிச்சலி சம்பா, காட்டுயானம், கருப்புப் கவுனி, குடல் வாழை உள்ளிட்ட 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்.

இது தொடர்பாக விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில்," நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்காலத்தில் உணவு முறை நம்மை வாழ்நாள் நோயாளிகளாக மாற்றி விட்டது. நமது முன்னோர்கள் இரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தியும், மரபு வழிகளால் நெல் ரகங்களை பாலிஷ் செய்யாமல் அதன் உண்மை தன்மையுடன் உணவாக உண்டதாலும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய உணவு முறை பல்வேறு வாழ்நாள் நோய்களுக்கு மனிதர்களை ஆட்படுத்துகிறது இவற்றைத் தவிர்க்க வேண்டும் இதிலிருந்து மனித குலத்தை காப்பாற்ற வேண்டும், அதற்கு நம்முடைய பாரம்பரிய விதை நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐயா நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றவர்கள் ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்தனர்.

அவர்கள் வழியில் நாங்கள் 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு சாகுபடி செய்கிறோம். இவற்றிற்கு உரங்களாக பஞ்சகாவ்யா, மாட்டு சானம், அமிர்தக் கரைசல், மீன் அமிலம் மற்றும் பூச்சிக்கொல்லிகளாக 10 வகையான தழைகளை பயன்படுத்தி இயற்கை உரங்கள் மட்டுமே இடுகிறோம். மேலும் இவற்றை அறுவடை செய்வதற்கு எந்திரங்கள் பயன்படுத்துவதில்லை. இந்த நெல் ரகங்களை முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு விதையாக மட்டுமே கொடுக்கிறோம் என்பதால் விதை நெல் வீணாகி விடக்கூடாது என்பதற்காக நானும் என் மனைவியும் மட்டுமே அறுவடை செய்து, தாளடித்து நெல்மணிகளை பாதுகாக்கிறோம். 

குறைந்தபட்சம் 100 வகையான நெல் ரகங்களையாவது பயிரிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பருத்திலும் நெல் ரகங்களையாவது பயிரிட அதிகரிப்போம் என்றார்.

மேலும் படிக்க | திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! அதிக தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

Trending News