நாய் வளர்ப்போர் கவனத்திற்கு... அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் என்னென்ன?

TN Governmet Restrictions On Pet Dogs: அரசால் பட்டியலிடப்பட்ட ஆபத்தான நாய்களை தற்போது வளர்ப்போருக்கான கடும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. அவற்றை இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 9, 2024, 05:56 PM IST
  • 23 வகை நாய்கள் ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த நாய்களை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய உத்தரவு
  • இந்த நாய்களை வெளியே அழைத்து வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாய் வளர்ப்போர் கவனத்திற்கு... அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் என்னென்ன? title=

TN Governmet Strict Restrictions On Pet Dogs: சென்னை கடந்த திங்கட்கிழமை அன்று சிறுமியை நாய் தாக்கிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதுபோன்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாய் இனங்களை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் முறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டு வந்தது.  

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை இன்று (மே 9) செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மே 6ஆம் தேதி அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

பின்வரும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. 2024ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடைபராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | சிவகாசியில் தரைமட்டமான பட்டாசு ஆலை... 8 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

ஆபத்தான நாய் வகைகள்...

மேலும் அவை, பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் நாய் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் தடை 

மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது.

கருத்தடை அறுவை சிகிச்சை

தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்த அழைத்து செல்லவேண்டும்.

முகக்கவசம் கட்டாயம்

அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியில் இருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | TN Board Result 2024 : நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News