குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2021, 09:13 AM IST
குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள் title=

ஜோதிடத்தை பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனிக்கின்றனர்.

குரு பகவான் பெயர்ச்சி (Guru Peyarchi) பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார். 

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் குரு பகவான் ஆலயம், குருவித்துறை குருபகவான் ஆலயம், தஞ்சை தென் திட்டை குருபகவான் ஆலயம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் இன்றைய தினம் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. 

இதில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் குரு பகவான் திருக்கோவில் சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலமாக அமைந்துள்ளது இங்கு மூலவர் ஆபத் சகாயர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

 

பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது நேற்று குரு பெயர்ச்சியை விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன நவகிரகங்களில் நன்மைகளை தரக்கூடிய சுப கிரகம் என அழைக்கப்படும் குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெறுவார் இன்று மாலை 6.21 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம் மகர ராசியில் இருந்து அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதம் கும்ப ராசியில் பிரவேசித்தார்.

மேலும் குரு பெயர்ச்சியினால் நன்மை பெறும் ராசிகள் மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் மகரம் ஆகியவை ஆகும். அதேபோல் பரிகாரம் செய்வதினால் நன்மை ஏற்படும் ராசிகள் ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் தனுசு கும்பம் மீனம் ஆகியவை ஆகும் மேலும் தொடர்மழையிலும் இத்திருக்கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவானை தரிசித்து சென்றனர்.

ALSO READ | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News