உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!

Udhayanidhi Stalin : தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டர் மூலம் உதகை வந்தார் உதயநிதி ஸ்டாலின் அவர் வருகை தந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர் .  

Written by - Yuvashree | Last Updated : Apr 14, 2024, 08:07 PM IST
  • ஹெலிகாப்டரில் வந்த உதயநிதி
  • உதகையில் தேர்தல் பிரச்சாரம்
  • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்! title=

Udhayanidhi Stalin : தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த, நிலையில் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். 

தேர்தல் பரப்புரைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அமைச்சர்கள் உட்பட தேர்தல் பொறுப்பாளர்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராசாவை ஆதரித்து நாளை உதகையில் தேர்தல் பரப்புரையை உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க | திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதற்காக ஹெலிகாப்டர் மூலம் உதகை தீட்டுக்கள் பகுதியில் உள்ள ஹெலி பேடுக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார் அவருக்கு கட்சியினர் வரவேற்பளித்தனர்  அப்போது அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை சோதனை செய்ய வேண்டும் என கூறினர் அப்போது உதயநிதி ஸ்டாலின் தாராளமாக செய்து கொள்ளலாம் என கூறினார்  ஹெலிகாப்டர் முழுவதும் சோதனை செய்தனர் பின்பு ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட உடமை பேகுகளையும்  முழுமையாக சோதனை செய்தனர் பின்பு உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு சென்றார் .

மேலும் படிக்க | 'பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா' - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News