அப்போது ஊழல்வாதி ஜெயலலிதா, இப்போது ஜெயலலிதா வழியில் ஆட்சி: அமித்ஷா இரட்டை நிலைப்பாடு

ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டுவர அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2023, 06:49 AM IST
  • பாஜக பாதயாத்திரையை தொடக்கம்
  • உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • திமுக அரசு மீது கடுமையான சாடல்
அப்போது ஊழல்வாதி ஜெயலலிதா, இப்போது ஜெயலலிதா வழியில் ஆட்சி: அமித்ஷா இரட்டை நிலைப்பாடு title=

’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல இருக்கிறார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதற்கான தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திட்டங்களை மீண்டும் கொண்டு வரவே அண்ணாமலை யாத்திரை தொடங்கியிருகிறார் என பேசினார். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு திமுக அரசு தான். ஊழலில் இருந்து தமிழகத்தை விடுவிக்கவே அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என விருப்பம். ஸ்டாலின் ஒரு டிவீட் போட்டால் உங்கள் ஆட்சிக்கே பூகம்பம் ஏற்படுகிறது என்று பேசினார். 

மேலும் படிக்க | நாட்டாமை... தீர்ப்பை மாத்தி சொல்லு! ராகுல் காந்தியின் பதவி பறிப்பும் சட்ட விளக்கமும்!

மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொடுக்க வேண்டும் என கூறி 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார் அமித்ஷா. ஆனால் அவரின் இந்த பேச்சு இரட்டை நிலைப்பாடாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி திருச்சியில் பேசிய அமித்ஷா, " அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் ஊழல் கட்சிகள். அக்கட்சி தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அவை அரசியல் வழக்குகள் அல்ல, ஊழல் வழக்குகள். நாட்டிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி தான்" கூறினார்.

2018 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி அமித்ஷா சென்னையில் பேசும்போது, நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று குற்றம்சாட்டினார். அவர் குற்றம்சாட்டி அந்நேரத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அண்ணாமலை கூட முன்னாள் முதலமைச்சர்கள் எல்லாம் நீதிமன்றத்தால் ஊழல் வழக்குகளுக்கு தண்டிக்கப்பட்டவர்கள், தமிழகத்தில் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என சில மாதங்களுக்கு முன்பு பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மறைந்த தலைவர் ஜெயலலிதாவை விமர்சிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அரசியல் களத்தில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

இது தொடர்பாக அந்த நேரத்தில் பாஜக மற்றும் அதிமுகவினரிடையே காரசார விவாதமாக ஓடிக் கொண்டிருந்தது. இப்படி அதிமுகவையும், ஜெயலலிதாவையும் முந்தைய தேர்தல் பிரச்சாரங்களின்போது அமித்ஷா மற்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துவிட்டு, இப்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் திட்டங்களை கொண்டு வரவே அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக அமித்ஷா பேசியிருப்பது எந்த மாதிரியான அணுகுமுறை? அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

மேலும் படிக்க | பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News