FIFA_2018: இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!

துனிசியா இங்கிலாந்து அணிகள் மோதலில் ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது!

Last Updated : Jun 19, 2018, 10:44 AM IST
FIFA_2018: இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி! title=

துனிசியா இங்கிலாந்து அணிகள் மோதலில் ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது!

FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்படுத்தப் பட்டுள்ளன.

இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும். 

இந்நிலையில் நேற்றைய தினம் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் துனிசியா இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் துனிசியா மீதிருந்த எதிர்பார்ப்பைவிட இங்கிலாந்து வென்றுவிடுமென்ற மனநிலையே பெரும்பாலான பார்வையாளர்கள் கொண்டிருந்தனர். பல கோல் வாய்ப்புகளை தடுத்துப் போராடிய துனிசியா கோல் கீப்பர் மோயிஸ் ஹஸன் 11 ஆவது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் தட்டிக் கோல் போட முயல திறமையாகத் தட்டிவிட்டார். 

துருதிர்ஷ்டவசமாக அருகே நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹாரி கேன், ஹஸன் தட்டிவிட்ட பந்தை மீண்டும் உதைத்துக் கோல் போட்டார். அதைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய ஹஸன் தன்னால் ஏற்பட்ட பின்னடைவை நினைத்துக் கண்ணீர் வடித்தவாறு களத்தைவிட்டுச் சென்றார். அவருக்கு மாற்றாக வந்த பென் முஸ்தஃபா, அதற்குப் பிறகு இங்கிலாந்தின் கேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற ஆட்டக்காரர்களை  கோல் போட விடவில்லை. 35-வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்து.

அதை தொடர்ந்து ஃபெர்ஜானி சஸ்ஸி கோல் போட்டார். அந்த பெனால்டி மூலம் முதல் பாதி முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது. இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து அணி கோல் போடுவதற்குத் தன் அனைத்து சக்தியையும் திரட்டிப் போராடியது. லிங்கார்டு, ஆல்லி டெலே, கேன் ஆகிய வீரர்கள் துனிசிய வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டார்கள். 

துனிசிய வீரர்களின் தற்காப்பு வியூகத்தை நன்றாக வகுத்துள்ளார் அவர்களின் பயிற்சியாளர் நபில். ஆனால், ஆட்ட நேரம் முடிந்து கூடுதலாக நான்கு நிமிடம் கொடுக்கப்பட்டபோது, இரண்டாவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் மூலம் வந்த பந்தைத் தலையில் தட்டிவிட்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் தனது இரண்டாவது கோலை அடித்து வெற்றியைத் தேடித்தந்தார். துனிசியா அணி தோல்வியைத் தழுவியிருந்தாலும், இங்கிலாந்துக்கு இறுதிவரை தோல்வி பயத்தைக் காட்டும் அளவுக்கு அதன் தற்காப்பு ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

Trending News