அடுத்த 5 மாதங்களுக்கு நோ ரெஸ்ட்! இந்திய அணி விளையாடும் தொடர்கள்!

India tour of Zimbabwe: 2024 டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்தியா ஜிம்பாபாவேவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 7, 2024, 06:35 AM IST
  • ஐபிஎல் முடிந்ததும் டி20 உலக கோப்பை.
  • டி20 உலக கோப்பை முடிந்ததும் ஜிம்பாப்வே தொடர்.
  • தொடர்ந்து கிரிக்கெட் விளையாட உள்ள இந்திய அணி.
அடுத்த 5 மாதங்களுக்கு நோ ரெஸ்ட்! இந்திய அணி விளையாடும் தொடர்கள்! title=

India tour of Zimbabwe: 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் தொடங்குகிறது.  இதன் இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் தேதி பார்படாஸில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடைபெற உள்ளது. 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி முடிந்த ஒரு வாரத்திற்குள் டி20 உலக கோப்பை போட்டிகள் தொடங்குகிறது.  இந்நிலையில், உலக கோப்பை முடிந்த அடுத்த 7 நாட்களில் இந்தியா ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து 5 மாதங்கள் விளையாட உள்ளது.  இந்த ஆண்டு வீரர்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  

மேலும் படிக்க | 6 மாதங்களுக்கு முன்பு கேலி செய்த ஷோயப் அக்தர்... தரமான பதிலடி கொடுத்த ஜஸ்பிரித் பும்ரா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையை இன்னும் அறிவிக்கவில்லை.  இருப்பினும் மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3 மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி, இறுதிப் போட்டியானது மே கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இவை ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்தியாவின் முதல் போட்டி அயர்லாந்திற்கு எதிராக ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது.  டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்ற ஒரு வாரத்தில் இந்திய அணிக்கு அடுத்த தொடர் தயாராக உள்ளது.  ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடர் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7, ஜூலை 10, ஜூலை 13 மற்றும் ஜூலை 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த ஐந்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2022ம் ஆண்டு இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. மேலும் 8 ஆண்டுகளுக்கு முன் 2016ல் டி20 போட்டியில் விளையாடியது. 

"உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பங்களிப்பதில் பிசிசிஐ எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. இது ஜிம்பாப்வே அணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த நேரத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு எங்கள் ஆதரவு தேவை. இந்த சுற்றுப்பயணம் மற்றும் சக கிரிக்கெட் வாரியங்களை ஆதரிப்பதில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. இருதரப்பு கிரிக்கெட்டை வலுவாகவும், வணிக ரீதியாகவும் சாத்தியமானதாக மாற்ற பிசிசிஐ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்" என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | IND vs ENG: இந்தியாவை விட்டு வெளியேறும் இங்கிலாந்து அணி...! இந்த திடீர் முடிவு ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News