முடிவுக்கு வரும் கேஎஸ் பாரத்தின் டெஸ்ட் வாழ்க்கை? மற்றொரு இளம் வீரருக்கு வாய்ப்பு?

India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 10, 2024, 05:09 PM IST
  • தொடர்ந்து சொதப்பி வரும் கேஎஸ் பாரத்.
  • இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
  • மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு.
முடிவுக்கு வரும் கேஎஸ் பாரத்தின் டெஸ்ட் வாழ்க்கை? மற்றொரு இளம் வீரருக்கு வாய்ப்பு? title=

India vs England: கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஒரு கார் விபத்தில் சிக்கினார், ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.  கடந்த 2 வருடங்களாக பந்த் சிகிச்சையில் இருந்து வருகிறார். காலில் மிகப்பெரிய அடி ஏற்பட்டு இருந்தாலும், தற்போது மீண்டு வருகிறார் ரிஷப் பந்த். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2024 போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரிலும் இடம்பெற வாய்ப்பு உள்ளது. பந்த் இந்திய அணிக்கு அனைத்து பார்மெட்டிலும் முக்கிய வீரராக இருந்துள்ளார்.  இளம் வயதிலேயே டெஸ்டில் 5 சதங்களை அடித்துள்ளார், மிடில் ஆர்டரில் களமிறங்கி 73.63  ஸ்ட்ரைக்-ரேட் வைத்துள்ளார்.

மேலும் படிக்க | இஷானுக்கு பிசிசிஐ மேல் இதற்குதான் கோபமா...?! வெளியான புதிய தகவல்

ரிஷப் பந்த் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியது முதல் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் இருந்து வருகிறார். ஆனாலும் ரிஷப் பந்தின் இடத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினாலும், ஆந்திராவை சேர்ந்த கேஎஸ் பரத் இந்திய அணிக்கு அவ்ளோ சிறப்பாக இதுவரை எதுவும் செய்யவில்லை. கேஎஸ் பாரத் அவரது முதல் 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.  இது ஒரு டெஸ்ட் பேட்டராக அவரது தகுதி குறித்த சந்தேகத்தை பலருக்கும் எழுப்பி உள்ளது.  7 டெஸ்டில் பாரத் 20.09 என்ற சராசரியில் 221 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் தோனி மற்றும் பந்த் இந்திய விக்கெட் கீப்பிங்கின் முகத்தை மாற்றியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேஎஸ் பாரத் 41, 28, 17, 6 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பாரத் பற்றி பேசி இருந்தார். "ஏமாற்றம் என்பது ஒரு  பெரிய வார்த்தை. நான் ஏமாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டேன், நேர்மையாக இருக்க வேண்டும். இளம் வீரர்கள் நட்சத்திரமாக மாற நேரம் தேவை. ஒரு பயிற்சியாளராக அணிக்கு வரும் இளம் வீரர்களை தட்டி கொடுக்க வேண்டும். இந்த இரண்டு ஆட்டங்களில் அவருக்குப் பலனளிக்கவில்லை, கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று டிராவிட் கூறினார்.

துருவ் ஜூரல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் துருவ் ஜூரல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  தென்னாப்பிரிக்கா தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடினார், ஆனால் இந்த தொடரில் அவர் பேட்ஸ்மேனாக மட்டுமே இருப்பார் என்பதால் துருவ் ஜூரல்க்கு வாய்ப்பு கிடைத்தது.  23 வயதாகும் துருவ் ஜூரல் உள்நாட்டு கிரிக்கெட்டில் இதுவரை 15 போட்டிகளில் 790 ரன்களை எடுத்துள்ளார்.  பிப்ரவரி 15 ஆம் தேதி சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெறும் டெஸ்டில் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | பிருத்வி ஷாவின் அசாத்திய சாதனை... இந்திய கிரிக்கெட்டில் இதுதான் முதல்முறை - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News