மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்

Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 1, 2024, 09:55 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • மே மாதத்தில் திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும்.
மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும் title=

Lucky Zodiac Signs of May 2024: மே மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான மாதமாக பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்தில் பல பெரிய கிரகங்களின் இயக்கங்களில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. முக்கியமாக, இன்று சுப கிரகமான குரு பகவான் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இது இந்த மாதம் மட்டுமின்றி, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

இது மட்டுமின்றி இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். மே மாதத்தில் குரு, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் கஜலக்ஷ்மி ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம், அங்காரக் யோகம், சனி ஷஷ யோகம், மாளவ்ய ராஜயோகம், சுக்ராதித்ய ராஜயோகம் ஆகியவை உருவாகும். இந்த சுப யோகங்கள் காரணமாக சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம் (Taurus)

குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் நடப்பதால், மே மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ரிஷப ராசியில் கஜலக்ஷ்மி, சுக்ராதித்யம், கஜகேசரி ராஜயோகம் உருவாகும். இவற்றின் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இவர்களுக்கு செல்வ வளமும் பெருகும். வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். கனவுகள் அனைத்தும் நனவாகும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் குரு அமைந்திருப்பதால் பல வித ஆதாயங்கள் கிடைக்கும். ஏனெனில் பத்தாம் வீடு புகழ், லாபம் மற்றும் அங்கீகாரத்திற்கு பெயர் பெற்றது. மே மாதத்தில் திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.

கும்பம் (Aquarius)

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கும்ப ராசிக்காரர்களுக்கு மே மாதம் சாதகமாக இருக்கும். ஏனெனில் சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இது தவிர குரு பகவான் நான்காவது வீட்டில் இருப்பார். மே மாதத்தின் நடுப்பகுதியில் நான்காம் வீட்டில் சுக்கிரனும் சூரியனும் கூடுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் கும்ப ராசிக்காரர்கள் மூன்று கிரகங்களின் சுப பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் திடீர் மாற்றத்தைக் காணலாம். பொருளாதார நிலை முன்பை விட நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணத்தை முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும். முன்னர் செய்த முதலீடுகளில் இப்போது லாபம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News