இந்த நாள் எப்படியிருக்கும்? தெரிந்துக் கொண்டால் கவனமாக இருக்கலாம்! மே 17 ராசிபலன்!

Lucky zodiac signs: மே மாதம் 17ம் நாள் வெள்ளிக்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் ஜாலியான வாழ்க்கையை வாழ்வார்கள்? தெரிந்துக் கொள்வோம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 17, 2024, 05:52 AM IST
  • தினசரி ராசிபலன் மே 17, 2024
  • மகர ராசிக்காரர்களுக்கு சூப்பர்
  • துலாம் ராசியினருக்கு கவலை
இந்த நாள் எப்படியிருக்கும்? தெரிந்துக் கொண்டால் கவனமாக இருக்கலாம்! மே 17 ராசிபலன்! title=

May 17 Rasipalan:  குரோதி ஆண்டு, வைகாசி மாதம் மூன்றாம் நாள், பூரம் நட்சத்திர நாளான இன்று அதிர்ஷ்டத்தால் நிம்மதியாக இருப்பவரகள் எந்த ராசிக்கார்கல்? தெரிந்துக் கொள்வோம்

17-05-2024 குரோதி, வைகாசி 4, ராசி பலன்கள்

மேஷம் 
சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். 

ரிஷபம் 
பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.  

மிதுனம் 
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தெளிவு உண்டாகும். கலை துறைகளில் ஆதாயம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். 

கடகம் 
உடலில் இருந்துவந்த சோர்வு, களைப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.  

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்

சிம்மம்
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.  

கன்னி 
விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். 

துலாம் 
எதிர்காலம் சார்ந்த கவலைகள் குறையும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். 

விருச்சிகம் 
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மறைமுகமான தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்த எண்ணம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் மறையும்.  

மேலும் படிக்க | Venus Transit 2024: சுக்கிரன் பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி தான்..!

தனுசு 
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். இணையம் தொடர்பான துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். தந்தை வழி நட்புகளால் ஆதாயம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  

மகரம் 
வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். 

கும்பம் 
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.  

மீனம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காதலுக்கு செட்டாகாத ராசிகள் இவை! கல்யாணம் கைகூடாத துரதிருஷ்டசாலி ராசிக்காரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News