சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிரடியான அதிர்ஷ்டம்... லாபம், பண வரவு

Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2024, 11:35 AM IST
  • கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  • நீங்கள் செய்யும் அனைத்து காரியத்திலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிரடியான அதிர்ஷ்டம்... லாபம், பண வரவு title=

Sani Vakra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அனைத்து கிரங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் இவரது  தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். 

சனியின் அனைத்து மாற்றங்களும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. சனியின் ராசி மாற்றம் சனி பெயர்ச்சி என அழைக்கப்படுகின்றது. இது தவிர நட்சத்திர பெயர்ச்சி, உதய, அஸ்தமன நிலைகள். வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இன்னும் பல வித மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படுகின்றன. சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் அவர் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைவார். 

பொதுவாக கிரகங்களின் வக்ர பெயர்ச்சிகள் ராசிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனினும், சில ராசிகளுக்கு இதனால் நல்ல பலன்களும் ஏற்படலாம். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவரகள். தொழில் புரிபவர்கள் தங்கள் தொழிலில் மேலும் வளர்ச்சி காண்பார்கள். இந்த காலத்தில் பல புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். இந்த காலத்தில் மன நிம்மதி கிடைப்பதோடு வருமானமும் பெருகும்.

ரிஷபம் (Taurus)

சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலை வலுவாகும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்திகளை பெறுவீர்கள். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்

துலாம் (Libra)

சனி பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். இது உங்கள் வணிகத்தை மேம்படுத்தும். புதிய பணிகளைத் தொடங்க திட்டம் உள்ளவர்கள் அதை இப்போது செய்யலாம். முன்னர் செய்த முதலீடுகளின் மூலம் இப்போது லாபம் காணலாம். வணிக வர்க்கம் வணிகத்தில் முன்னேற இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். 

தனுசு (Sagittarius)

கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து காரியத்திலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். சனியின் அருளால் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News