12 பீர்களை ஒரே நேரத்தில் தூக்கிய பெண்! பிறகு என்ன ஆனது என்பதை பாருங்கள்!

க்ளப்பில் ஒரு பணிப்பெண் ஒரே நேரத்தில் 12 பீர் கப்புகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி தனது கைகளால் ஏந்தி வரும் வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 20, 2022, 10:26 AM IST
  • பியர் கப்பை அசால்ட்டாக தூக்கிய பெண்.
  • கீழே விழாமல் அழகாக கொண்டு செல்கிறார்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
12 பீர்களை ஒரே நேரத்தில் தூக்கிய பெண்! பிறகு என்ன ஆனது என்பதை பாருங்கள்! title=

இணையதளங்கள் ஒருபோதும் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் வேலையை செய்ய தவறியதில்லை, நம்மை வியக்கவைக்கும் வகையிலான பல அதிசயமான கண்கவர் காட்சிகளை நாள்தோறும் நமது கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது.  எப்போதுமே இணையத்தில் பரவும் வினோதமான வீடியோக்களுக்கு இணையவாசிகள் மத்தியில் மவுசு அதிகம், அதுபோன்ற வீடியோக்கள் தான் விரைவில் வைரலாகி விடுகிறது.  ஒரு பணிப்பெண் அசால்ட்டாக ஒரே நேரத்தில் தனது கைகளில் 12 பீர் கப்புகளை கொண்டு வரும் வீடியோ நெட்டிசன்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.  ஒரே நேரத்தில் நம்மால் அதிகபட்சம் இரண்டு கைகளாலும் இரண்டு அல்லது மூன்று கப்புகளுக்கு மேல் எடுத்துவர முடியாது.

மேலும் படிக்க | சரக்கடித்து போதையில் முழிக்கும் குரங்கு: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

அப்படி இருக்கையில் அந்த பணிப்பெண் ஒரே நேரத்தில் அசால்ட்டாக ஒரு டஜன் கப்புகளை எடுத்து வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பாக இந்த வீடியோ மதுபிரியர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது.  இந்த வீடியோவானது pubity என்கிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் இரண்டு பணியளர்கள் ஒரு மேஜையில் கப்பில் பீர்களை நிரப்பி கொண்டிருப்பதை காண முடிக்கிறது, அதில் ஒரு பணிப்பெண் பீர் நிரப்பப்பட்ட கப்புகளை ஒன்று சேர்த்து கொண்டிருக்கிறார்.  திடீரென்று கண் இமைக்கும் நொடியில் 12 பெரிய அளவிலான பீர் கப்புகளை அழகாக அடுக்கி எவ்வித பதட்டமும் இல்லாமல் அசால்ட்டாக தனது கைகளால் தூக்கி செல்கிறார், இவரின் திறமையை கண்டு வியந்து அருகிலிருக்கும் ஒருவர் அவரை பாராட்டும் விதமாக சைகை செய்கிறார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pubity (@pubity)

இந்த வீடியோவை சேலஞ்சாக எடுத்துக்கொண்டு எத்தனை பேர் இதுபோல் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.  அவர் அடுக்கடுக்க பீர் கப்புகளை கொண்டு செல்வது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.  இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News