Single-ஆக இருப்பவர்களுக்கு துணையாக வருகிறது Shoelace...

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக, கூகுள் நிறுவனமும் புதியதாக SHOELACE என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளது. 

Last Updated : Jul 16, 2019, 04:47 PM IST
Single-ஆக இருப்பவர்களுக்கு துணையாக வருகிறது Shoelace... title=

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக, கூகுள் நிறுவனமும் புதியதாக SHOELACE என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளது. 

தொடர்ந்து பல ஆண்டுகளாக சமூக ஊடக தளமை ஒன்றை உருவாக்கிவிட கூகிள் திட்டமிட்டு வருகிறது. எனினும் அதன் முயற்சிகள் இதுவரை கைகொடுக்கவில்லை. அந்த வகையில் சமீபத்தில் கூகிள் பிளஸ் கைவிடப்பட்டது. முன்னதாக ஆர்குட் அவ்வாறே முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது SHOELACE என்ற சமூக வலைதளம் மூலம் கூகுள் களமிறங்கியுள்ளது. SHOELACE சமூக வலைதளம் போன்று தான் என்றாலும் மொபைல் செயலி வடிவில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சீன சமூக வலைதள செயலியான Helo, ShareChat போன்றவற்றுக்கு போட்டியாக SHOELACE இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது SHOELACE சமூக வலைதள செயலி சேவை நியூயார்க் நகரத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகள், நகரங்களிலும் SHOELACE சேவை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.  

Android சாதனங்கள் மற்றும் iOS என இரண்டையும் ஆதரிக்கிறது இந்த தளதித்தில் நுழைவதற்கு Google கணக்கு இருத்தல் அவசியம் ஆகும். புதியதொரு நகரில் இடம்பெயரும் நபர்கள், அங்கிருப்பவர்களுடன் புதிய நட்பு பாராட்ட இந்த செயலி பயன்படும் எனவும்  கூறப்படுகிறது.

பல முறை ஃபேஸ்புக், டிவிட்டருக்கு போட்டியாக சமூக வலை தளத்தை உருவாக்க முயன்று தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், SHOELACE கூகிளுக்கு வெற்றியை தருமா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம். 

Trending News