இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலீட் செய்த யுவன்.. விஜயின் ரசிகர்கள் தான் காரணமா?

Yuvan Shankar Raja : பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "Goat" படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோட் படத்தில் விசில் போடு பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டார்கள். யுவன் இசையில் விஜய் இந்த படாலை பாடியிருந்தார். 

1 /5

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. தற்போது வரை இவரது இசையில் வெளியாகியுள்ள அனைத்து பாடல்களும் மெகா ஹிட் பாடல்கள் என்றே தான் கூட வேண்டும்.  

2 /5

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் "Goat" திரைப்படத்தில் இசையமைப்பாளராக பயணித்து வருகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. 

3 /5

சமீபத்தில் மதன் கார்த்தியின் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், தளபதி விஜய் குரலில் "கோட்" திரைப்படத்திலிருந்து விசில் போடு "whistle podu" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியானது. 

4 /5

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், சிலர் யுவன் சரியாக சங்கர் இந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று குற்றச்சாடினர், குறிப்பாக விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த சலசலப்பு எழுந்து வந்தது.

5 /5

இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடைசியாக பதிவிட்ட போஸ்ட்டிற்கு அதிக நெகடிவ் கமெண்ட் வந்ததே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.