Food For Kidney: சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் உணவுகள்

Best Kidney Cleanse Remedies: கிட்னி நம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும், இது ஒரு பில்டராக நம் உடலில் மற்றும் கிட்னி நம் உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தைப் பற்றி சிறப்பு கவனம் செலுத்தப்படாவிட்டால், அதன் தோல்விக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், அத்துடன் நம் உடல் நச்சுகளால் நிரப்பப்படம். பொதுவாக நாம் போதுமான அளவு திரவத்தை எடுத்துகொள்ளும் போது சிறுநீரகங்கள் தங்களை தாங்களே சுத்தப்படுத்துகின்றன. சிறுநீரக சுத்திகரிப்பு என்பது குறிப்பிட்ட உணவுகள் மற்றும் மூலிகைகள் உட்கொள்வதை உள்ளடக்கியது. எனவே இந்தியாவின் பிரபல சுகாதார நிபுணரான நிகில் வட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் எந்த உணவு சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவும் என்பதை தெரிவித்துள்ளார். அதன் விவரத்தை இங்கே காண்போம்.

1 /5

குருதிநெல்லி: ஒரு கிளாஸ் சுத்தமான மற்றும் ஃபிரெஷ் குருதிநெல்லி சாற்றை வாரத்திற்கு ஒருமுறை குடிக்கலாம். இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது.

2 /5

பூண்டு: காலையில் பச்சையாக பூண்டு சாப்பிடுங்கள் அல்லது 5-6 இடித்த பூண்டு பற்களை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் சூடாகியதும் குடிக்கவும். இது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை விரைவாக சுத்தப்படுத்த உதவுகிறது.

3 /5

மஞ்சள்: இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது, அத்துடன் சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது புத்திசாலித்தனமான முடிவை ஏற்படுத்தும்.

4 /5

இஞ்சி: இது பித்த சுரப்பு மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது, இது சிறுநீரகத்தின் கனிம படிவுகளை குறைக்கிறது. பச்சை இஞ்சி அல்லது 2-3 கப் இஞ்சி தேநீர் பயன்படுத்துவது சிறுநீரகத்தை சுத்தப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.  

5 /5

பீன்ஸ்: ஒரு கப் பீன்ஸை 2-3 லிட்டர் தண்ணீரில் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். அதன் நீர் மந்தமாக மாறும் வரை காத்திருங்கள். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு ஒரு முறை குடித்தால், நச்சுகள் மற்றும் மேக்ரோப்கள் நீங்கும்.