திரிகிரஹி யோகத்தால் குஷியில் கும்மாளம் போடப்போகும் ராசிகள்...

Trigrahi yog In Rishaba Rasi: ரிஷப ராசியில் சூரியன், வியாழன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த மாதம் 19ம் தேதி உருவாகும் இந்த யோகம் சுபமான ராஜயோகமாக இருக்கும்

பல வருடங்களுக்கு பிறகு ரிஷப ராசியில் உருவாகும் இந்த யோகம் வருவதற்கு முன்னரே தனது அதிர்ஷ்டத்தை பொழியத் தொடங்கிவிடும். அந்த ராசிக்கார ராசிகள் எவை என்று தெரிந்துக் கொள்வோம்... 

1 /9

ரிஷப ராசியில் சூரியன், வியாழன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இருப்பது, அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் 4 ராசிகளுக்கு அமோகமான நற்பலன்கள் ஏற்படும்

2 /9

மே மாதம் முதல் நாளன்று குரு பகவான் ரிஷப ராசிக்கு மாறினார்

3 /9

மே 19 அன்று, சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதன் காரணமாக ரிஷப ராசியில் சூரியன், வியாழன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகிறது.

4 /9

மே 14 அன்று, சூரியன் ரிஷப ராசிக்கு மாறினார், இது வைகாசி மாதத்தின் முதல் நாளாகும்

5 /9

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரனாக இருக்கும் நிலையில், சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் இந்த திரிகிரஹி யோகம் துலா ராசிக்காரர்களுக்குப் அதிக நன்மைகளைத் தரும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு, ஊதியமும் அதிகமாக கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்

6 /9

சிம்ம ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் நல்ல பலன்களைத் தரும். நிலுவையில் இருந்த பணிகள் தற்போது முடிவடையும், எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். விரும்பிய பதவியும் பணமும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்ய சிறந்த நேரம் இது

7 /9

கடக ராசிக்காரர்களுக்கு பணத்தையும் முன்னேற்றத்தையும் மரியாதையையும் தரும் இந்த திரிகிரஹி யோகத்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.  வருமானத்தை அதிகரிக்கும். திடீர் பணவரவு மகிழ்ச்சியத் தரும். குடும்பத்துடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும், அதன் மூலம் அதிர்ஷ்டமும் ஏற்படும்

8 /9

திரிகிரஹி யோகம் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.  உங்கள் செல்வாக்கும் கவர்ச்சியும் அதிகரிக்கும். நீங்கள் ஒரே நேரத்தில் பல புதியசெயல்களைத் தொடங்கலாம். பல விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் உத்வேகம் ஏற்படும், வியாபாரிகளுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். 

9 /9

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது