Hair Care: கருகருவென முடி வளர்க்க ஆசையா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

Hair Care Tips: பலருக்கு தனது முடி கருகருவென வேகமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக எந்த டிப்ஸை பின்பற்ற வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ் இதோ!

1 /7

முடி வளர்ச்சி குறித்த விழிப்புணர்வும் அது குறித்த புரிதலும் பலருக்கு அதிகரித்துள்ளது. கால சூழ்நிலைகளினாலும், காற்றில்கலந்துள்ள மாசுக்களாலும் முடி வளர்ச்சி பாதிப்படைகிறது. அதையும் மீறி சில விஷயங்களை ஃபாலோ செய்தால் முடி வேகமாக வளரும் என்கின்றனர், மருத்துவர்கள். 

2 /7

முடி அதிகமாக வளர்வதற்கு, பரம்பரை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணத்திற்கு உங்களது தாத்தா அல்லது பாட்டிக்கு கருகருவென முடி வளர்ந்திருந்தால் உங்களுக்கும் அந்த அளவிற்கு முடி இருக்கும். 

3 /7

சியா விதைகளில் பல மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் இருக்கிறது. இது, மயிர்கால்களை பலமாக்க உதவும். ஒரு ஸ்பூன் சியா விதைகளை தயிரில் கலந்து காலை உணவாக சாப்பிடலாம். இந்த விதைகளை சாப்பிடுவதற்கு முன்னர் 15-20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 

4 /7

மிகவும் சுவையான பழங்களுள் ஒன்று, அவகேடோ. அது மட்டுமல்ல, இவை உங்களின் முடி வளரவும் உதவும். இதில், வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளது. இதை ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம். அவகேடோ பழத்தை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து தலையில் தடவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து ஷாம்பூ வைத்து தலையை அலச வேண்டும்.

5 /7

யோகா ஆசனங்களால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் நிகழ்கின்றன. அப்படி நன்மை தரும் யோகாசனங்களுள் ஒன்று, யோகேந்த்ர சக்ரா. இந்த ஆசனத்தை செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் முழுவதும் ஆக்சிஜனின் அளவும் அதிகரிக்கும். 

6 /7

தலையணையின் உறைகளுக்கும் முடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில், கடினமாக இருக்கும் தலையணை உறைகளால் முடி உடையவும் முடி உதிரவும் வாய்ப்புகள் இருக்கிறது. சில்க், சாட்டின் வகை தலையணையை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடியில் சிக்கல் ஏற்படும். 

7 /7

தலைமுடி, மெல்லிய பூ போன்றது. அதனால் அதை சரியான முறையில் கையாள வேண்டும். தலை முடியை சிக்கு எடுக்கையிலும் மென்மையாக கையாள வேண்டும். பெரிய பல் சீப்பை வைத்து தலை முடியை சிக்கெடுக்க வேண்டும். அப்போதுதான் சீராக சிக்கெடுக்க இயலும்.