உலகின் மிக குள்ளமான பெண்ணை ஒருகையில் தூக்கிய தி கிரேட் காளி!

தி கிரேட் காளி உலகின் மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கேவை ஒரு கையில் தூக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

1 /7

உலகளவில் மல்யுத்தத்தில் புகழ் பெற்ற தி கிரேட் காளி சமீபத்தில் உலகின் மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கேவை சந்தித்தார். அவரை சந்தித்தது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.  

2 /7

அந்த வீடியோவில் தி கிரேட் காளி ஜோதி அம்கேவை ஒரு கையில் தூங்கி வைத்திருப்பதை காண முடிந்தது. அவரது கையில் அந்த பெண் ஒரு சிறு பொம்மை போல தோன்றினார்.  

3 /7

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. காளி அம்கேயை ஒரு கையால் தூக்குவதையும், அம்கே சிரிப்பதை நிறுத்த முடியாமல் இருப்பதையும் காணலாம்.   

4 /7

மே 18 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ ஏற்கனவே 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  

5 /7

டிசம்பர் 6, 1993ல் பிறந்த ஜோதி அம்கே 62.8 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்டவர். மேலும் இவர் உலகின் மிக குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.   

6 /7

அகோண்ட்ரோபிளாசியாவால் பாதிக்கப்பட்ட போதிலும், ஆம்கே பல நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு சல்மான் கானின் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார்.   

7 /7

அம்கே 2009 ஆம் ஆண்டு பாடி ஷாக்: டூ ஃபுட் டால் டீன் என்ற தலைப்பில் ஆவணப்படத்தில் இடம்பெற்றார். இது தவிர, லோனாவாலாவில் உள்ள பிரபல மெழுகு அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.