உங்கள் மெமரி பவரை அதிகப்படுத்தும் உணவுகள்! ‘இதை’ சாப்பிட்டால் எதுவுமே மறக்காது..

Super Foods That Will Improve Your Memory : மனிதனுக்கு நியாபகத்திறன் என்பது மிகவும் முக்கியமாகும். அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள நமக்கு ஒரு சில உணவுகள் உதவி புரிகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

Super Foods That Will Improve Your Memory : மனிதனுக்கு மூளை செயல்திறன் என்பது மிகவும் முக்கியமானதாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் பலருக்கு அனைத்தையும் நினைவு திறனில் வைத்துக்கொள்ள வேண்டியது முடியாத காரியமாகி போகிறது. உணவு முறை பழக்கத்தின் மாறுதல்களால், மறதி நோய் உள்ளிட்ட நோய்களும் வரலாம். இதை தவிர்க்க, சில ஆரோக்கியமான உணவு பழக்கங்களை நாம் பின்பற்றுவது மிகவும் முக்கியமாகும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

1 /7

மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல். இதை சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்குமாம். 

2 /7

ப்ளூ பெர்ரி: ப்ளூபெர்ரியில் அழற்சி எதிர்ப்பு பன்புகள் பல உள்ளன. இதனால் மூளையின் செயல் திறனை அதிகரிக்கவும், முதுமை காலத்தில் மறாதி ஏற்படாமல் இருக்க இந்த உணவை சாப்பிடலாம்.

3 /7

ப்ரக்கோலி: மூளையின் செல்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்று. ப்ரக்கோலி. இதில் வைட்டமின் கே சத்துகளும் உள்ளது. 

4 /7

காபி: காபி குடிப்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது இல்லை என்றாலும், இது மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் என்பது ஒரு சிலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், இதையும் அளவாகவே பருக வேண்டும் என பலர் பரிந்துரைக்கின்றனர். 

5 /7

ஃபேட்டி மீன்கள்: சால்மன் உள்பட ஒரு சில மீன்கள் ஃபேட்டி மீன்கள் என கூறப்படும். இதில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள், மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கும். 

6 /7

தர்பூசணி விதைகள்: தர்பூசணி விதைகளில் ஜிங், மாக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு சத்துகள் ஆகியவை நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கும் என மருத்துவ அறிக்கைகள் சில குறிப்பிடுகின்றன. 

7 /7

மஞ்சள்: மஞ்சள், மூளை செயல்பாடுகள் மட்டுமன்றி உடலின் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கும் உதவும். இது, புதிய மூளை நரம்புகளை உருவாக்கவும் உதவும் என கூறப்படுகிறது.    (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)