கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் தேர்தலில் போட்டி... தமிழ்நாட்டின் 8 வேட்பாளர்கள் இதோ!

தமிழ்நாட்டில் வரும் மக்களவை தேர்தல் எவ்வித சொத்துகளும் இல்லாமல், சொத்து மதிப்பு பூஜ்யமாக இருக்கும் 8 வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடுகின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.

  • Apr 10, 2024, 13:49 PM IST

இவர்களுக்கு அசையும் சொத்து, அசையா சொத்து என எதுவுமே இல்லை. குறிப்பாக இந்த 8 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.

 

1 /8

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுரேஷ் என்ற வேட்பாளரின் சொத்து மதிப்பு பூஜ்யம் என தேர்தல் வேட்புமனு தாக்கலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

2 /8

திருச்சி தொகுதியில் இருந்து போட்டியிடும் ஆர். அன்பின் அமுதன் என்ற சுயேச்சை வேட்பாளரின் சொத்து மதிப்பு பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

3 /8

விழுப்புரம் (sc) மக்களவை தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடும் குணசேகரன் என்பவரின் சொத்து மதிப்பு பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

4 /8

அதே, விழுப்புரம் (sc) மக்களவை தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடும் சத்யராஜ்.என் என்பவரின் சொத்து மதிப்பும் பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

5 /8

கிருஷ்ணகிரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எஸ்.ஆல்பர்ட் பிரான்சிஸ் சேவியர் என்பவரின் சொத்து மதிப்பும் பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

6 /8

வேலூர் தொகுதியில் பிபி ஜெயபிரகாஷ் என்ற வேட்பாளரின் சொத்து மதிப்பும் பூஜ்யம் என தெரிவிக்கப்படுகிறது.   

7 /8

அதேபோல் அரக்கோணத்தில் அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் வேட்பாளரான கே.விஜயன் என்பவரின் சொத்து மதிப்பும் பூஜ்யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

8 /8

தென்சென்னை மக்களவை தொகுதியில் தேவேந்திரன் என்ற சுயேச்சை வேட்பாளரின் சொத்து மதிப்பும் பூஜ்யம் ஆகும்.