200 ஆண்டுகளுக்கு பின் சனியின் அபூர்வ நிகழ்வு: இந்த ராசிக்கு அரச ராஜயோகம்

Saturn Transit In Poorattathi Nakshatra: சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். எனினும் இதன் தாக்கம் 3 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.

தற்போது சனி பகவான் சொந்த ராசியான கும்ப ராசியில் ஆட்சி பெற்று வருகிறார். வரும் மே 12ஆம் தேதி முதல் கும்பத்தின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய போகிறார் சனி. ஆகஸ்ட் 18ம் தேதி வரை கும்ப ராசியில் சந்திக்க கூடிய சனி பகவானால் சில ராசிக்கு கடினமான பலன்கள் கிடைக்ககூடும், அதேசமயம் சில ராசிக்கு அதிர்ஷ்டங்களும் ஏற்படக் கூடும்.

1 /6

சனி நட்சத்திர பெயர்ச்சி: சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2 /6

மேஷம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரும். எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். வருமானத்தில் உயர்வு இருக்கும். தொழிலில் நல்ல லாபத்தை ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நிதி ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

3 /6

துலாம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபத்தை தரும். புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

4 /6

கும்பம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு வாரி வழங்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மரியாதை அதிகரிக்கும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

5 /6

சனி மூல மந்திர ஜபம்: "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.