அல்லு அர்ஜுனின் நிகர சொத்து மதிப்பு: புஷ்பா நடிகரின் ஆடம்பர வாழ்க்கை!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  அவருடைய நிகர மதிப்பைப் பற்றி பார்ப்போம்.

 

1 /5

இந்திய திரையுலகில் உள்ள பணக்கார நடிகர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர். திரைப்படங்கள் மட்டுமின்றி, விளம்பரங்கள் மூலம், பல பிரபல நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் கூறப்படுகிறது.  

2 /5

அல்லு அர்ஜுன் வீடு ஹைதராபாத்தில் உள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடி என்று கூறப்படுகிறது.  மேலும் மும்பையில் உள்ள முக்கிய நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார் அல்லு அர்ஜுன்.  

3 /5

அல்லு அர்ஜுனுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.  வீட்டில் பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். BMW, ரேஞ்ச் ரோவர், ஆடி போன்ற கார் நிறுவனங்களின் விலை உயர்ந்த கார்கள் இவரிடம் உள்ளன.   

4 /5

விலையுயர்ந்த கார்கள் மற்றும் வீடுகள் தவிர, அல்லு அர்ஜுன் கைக்கடிகாரங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார். சாண்டோஸ் 100XL என்ற உயர்ரக கடிகாரத்தை வைத்திருக்கிறார். இதன் விலை ரூ.4.44 லட்சம். ரோலக்ஸ் வாட்சும் இவரிடம் உள்ளது.  

5 /5

மேலும் அல்லு அர்ஜுனிடம் வேனிட்டி வேனும் உள்ளது. இதன் விலை மட்டும் சுமார் ரூ.7 கோடி என கூறப்படுகிறது. வேனிட்டி கேபினில் முக்கிய சந்திப்புகளை நடத்துகிறார்.