அஜீத்தின் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

1 /5

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில், அஜீத் குமார் - மகிழ் திருமேனியின் கூட்டணியில் உருவாகும் படம் விடாமுயற்சி. மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.   

2 /5

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.  தற்போது இந்த படத்தில் மலையாள நடிகர் ஒருவர் கூடுதலாக இணைந்துள்ளார்.  

3 /5

விடாமுயற்சி படத்தில் மற்றொரு வில்லனாக மலையாள நடிகர் மேபு ஜார்ஜ் பால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  ஆனாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.    

4 /5

அஜர்பைஜானில் நடந்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.  மே மாதம் படம் வெளியாக உள்ளது.  

5 /5

சமீபத்தில் வானிலை காரணமாக படப்பிடிப்பு தாமதமான நிலையில், விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற உள்ளது.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.