Kidney Stone பிரச்சனை உள்ளவர்கள் இதையெல்லாம் நினைவில் கொள்ள வேண்டும்

Kidney Stone Diet: வயது ஏற ஏற உடலில் பல பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதில் ஒன்று சிறுநீரக பிரச்சனையாகும். மாறிவரும் வாழ்க்கை முறையால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நல்ல வாழ்க்கை முறை மிக அவசியமாகும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த வகையான காய்கறிகளை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

1 /5

தற்போது சிறுநீரக கற்களால் பலர் சிரமப்படுகின்றனர். மருந்து மற்றும் முறையான உணவு முறை மூலம் இதனை குணப்படுத்த முடியும். ஆனால் பித்தப்பையில் கல் இருந்தால் அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. சிறுநீரக கல் உள்ள நோயாளிகள் கால்சியம் நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனுடன், உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களையும் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். இந்த காய்கறிகள் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கின்றன. 

2 /5

- ப்ரோக்கோலி - குடைமிளகாய் - வாழை - பட்டாணி மற்றும் பீன்ஸ் - எலுமிச்சை

3 /5

சிறுநீரக கல் உள்ள நோயாளிகள், விதைகள் உள்ள காய்கறிகளை சாப்பிடவே கூடாது. இது தவிர, அதிக அளவு சோடியம் உள்ள பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், குளிர் பானங்கள், சாக்லேட், தேநீர் போன்றவற்றை சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். தவறுதலாக கூட இந்த காய்கறிகளை உணவில் சேர்க்காதீர்கள்.

4 /5

- கத்திரிக்காய் - கீரை - தக்காளி - வெள்ளரிக்காய்

5 /5

சிறுநீரகம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே சிறுநீரக பிரச்சனை கண்டறியப்பட்டவர்கள், தங்கள் உணவில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சிலருடைய பிரச்சனைகள் கடைசி கட்டத்தில் கண்டறியப்பட்டு, அதன் காரணமாக அவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)