குரு பெயர்ச்சி 2023: குரு அருளால் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

Guru Peyarchi 2023: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு தற்போது மீனத்தில் உள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் அவர் பெயர்ச்சியாகவுள்ளார். குரு மேஷ ராசியில் நுழையும் போது அனைத்து 12 ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும். இந்த தாக்கம் சிலருக்கு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு குருவின் இந்த பெயர்ச்சி சுமாரான விளைவுகளையே அளிக்கும். குரு பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள விளைவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /12

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பெயர்ச்சியின் போது, மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அவசரம் காரணமாக சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம். ஆகையால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். முன்பை விட அதிகமாக சேமிக்க முயற்சி செய்வீர்கள். 

2 /12

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரத்தால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சிலும் நடத்தையிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

3 /12

ஜோதிட சாஸ்திரத்தின் படி மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும். வருமான வழிகள் அதிகரிக்கும். வருமானம் பெருகும்.

4 /12

இந்த காலத்தில் கடக ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய சலுகைகள் கிடைக்கும். பயண வாய்ப்புகள் உருவாகும்.

5 /12

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். திடீர் பண ஆதாயம் ஏற்படும். ஏற்கனவே சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.  

6 /12

கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரத்தால் முதலீட்டில் லாபம் கிடைக்கும். கூட்டு சேர்ந்து வேலை செய்வதால் வியாபாரம் பெருகும். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.

7 /12

குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

8 /12

ஜோதிட சாஸ்திரத்தின்படி, விருச்சிக ராசிக்காரர்கள் வியாழனின் சஞ்சாரத்தால் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவை. 

9 /12

குருவின் இந்த பெய்ர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

10 /12

இந்த நேரம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். 

11 /12

குரு பெயர்ச்சி காலத்தில் அதிகபட்ச சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். இந்த வேலையில் உங்கள் மனைவி உங்களுக்கு உதவுவார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.

12 /12

ஜோதிடத்தின் படி, மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோயிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். உங்கள் நிதி நிலையும் மேம்படும், வாங்கிய கடனை விரைவில் திருப்பிச் செலுத்த முடியும். மன அமைதி கிடைக்கும்.