காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

 

1 /5

காரமான உணவுகள் காலையில் கண்டிப்பாக காரமான உணவுகளை சாப்பிட கூடாது. இவை வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் வலியை உண்டாக்கும். 

2 /5

ஜூஸ் காலையில் பழச்சாறு குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. அவற்றில் நார்ச்சத்து மற்றும் நிறைய சர்க்கரை கொண்டவையாக உள்ளன.

3 /5

தயிர் தயிர் உடலுக்கு நல்லது என்றாலும், வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலை அதிகரிக்கிறது.

4 /5

காபி சர்க்கரை கலந்த பானங்களை அதிக அளவில் காலையில் குடித்தால் இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே காலையில் இவற்றை தவிர்க்க வேண்டும்.

5 /5

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிட நல்லது இல்லை.  இவற்றில் சிட்ரிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இவை வயிற்றின் அமில உற்பத்தியை அதிகரிக்கலாம்.