யூரிக் ஆசிட் கட்டுபாட்டுக்கு அற்புதமான தேநீர்! பிரச்சனைகளை தீர்க்கும் வாழைப்பழ ’டீ’

Control Uric Acid With Special Tea: நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் கழிவுப் பொருளான யூரிக் அமிலம் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை மூட்டுகளில் படியத் தொடங்குகிறது. இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது

யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சிறப்பு தேநீர், மூட்டு வலி முதல் சிறுநீரகம் வரை அனைத்து செயல்பாடுகளையும் முறைப்படுத்துகிறது. சிறப்பான தேநீராக இருந்தாலும் பலன் அதிகம், செய்வதோ மிகவும் சுலபம்...  

 

1 /8

யூரிக் அமிலம் உள்ளவர்கள் சரியான உணவைப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம். யூரிக் அமில பிரச்சனையை குறைக்கும் பல பழங்கள் உள்ளன. இவற்றில் வாழைப்பழமும் அடங்கும். 

2 /8

இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்க, வாழைப்பழத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்ளலாம். வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் தோலும், பல ஆரோக்கிய பண்புகள் நிறைந்தது. வாழைப்பழத் தோலை உட்கொள்வதன் மூலம் அதிக யூரிக் அமில பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3 /8

பானங்கள் மூலம் உடல்நலத்தை பேணுவது என்பது பல்வேறு மருத்துவ முறைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று

4 /8

வாழைப்பழத் தோலில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். இதில் உள ஃபிளாவனாய்டுகள் வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

5 /8

வாழைப்பழ டீயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

6 /8

வாழைப்பழத்தோல் டீ தயாரிக்க, புதிதாக உரிக்கப்பட்ட வாழைப்பழத் தோலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து டீ தயாரிக்கலாம்

7 /8

ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு மீடியம் அளவிலான வாழைப்பழத்தின் தோலை வேகவிடவும். நன்கு கொதி வந்ததும், அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். இந்த பானம் யூரிக் அமில பிரச்சனைக்கு அற்புதமான நிவாரணம் வழங்கும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை