‘விடாமுயற்சி' படத்திற்காக அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?

Ajithkumar Salary for VidaaMuyarchi Movie: விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

1 /7

அஜித்குமார் அடுத்து நடிக்க இருக்கும் படம், விடாமுயற்சி. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 

2 /7

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, துபாயில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறாராம். 

3 /7

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தடையறத் தாக்க, தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

4 /7

அஜித், விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

5 /7

ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியிருந்தார். இவர், அஜித்குமாரின் பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

6 /7

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

7 /7

அஜித், இப்படத்திற்காக 160 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். விடாமுயற்சி படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.225 கோடி என்று கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டில் பாதியை அஜித்திற்கு சம்பளமாக வழங்கியுள்ள செய்தி, ரசிகர்களை அதிர வைத்துள்ளது.