2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!

ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்

ஐபிஎல் 2024 ஒரு வரலாற்று சீசன் என்பதை நிரூபிக்கிறது. இந்த சீசனில், சிக்ஸர்கள் முதல் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் வரையிலான பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 நாட்களுக்குள் இரண்டு முறை அதிகபட்ச ஸ்கோரை முறியடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளது என்பதால்  2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள் பார்க்கலாம்.

 

1 /5

தகர்க்கவே முடியாத ஐபிஎல் சாதனை என்று எடுத்தால் அதில் முதல் இடத்தில் இருப்பது கிறிஸ் கெயில் தான். தனிநபர் அதிகபட்ச ஸ்கோரில் ஐபிஎல் வரலாற்றில் கெயில் 175 ரன்கள் குவித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸூக்கு எதிராக  66 பந்துகளில் 17 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் எடுத்தார்.  

2 /5

கிறிஸ் கெயிலின் இன்னொரு சாதனையும் இருக்கிறது. மேலே படைத்த சாதனையின் தொடர்ச்சி தான் இது. 175 ரன்கள் விளாசியபோது 30 பந்துகளில் சதம் அடித்தார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிவேகமாக அடித்த சதமாகும். இரண்டாவது இடத்தில் யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.  

3 /5

சிறந்து பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அல்சாரி ஜோசப் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடியபோது வெறும் 3.4 ஓவர்களில் மெய்டன் ஓவர் வீசி 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2008ல் 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் சோஹைலின் சாதனையை ஜோசப் முறியடித்திருந்தார்.  

4 /5

தொடர்ச்சியாக ஒரு அணி அதிக வெற்றிகள் பெற்ற பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக ஐபிஎல் வரலாற்றில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. KKR 2014ல் தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றிருந்தது. இதற்குப் பிறகு, 2015 சீசனின் தொடக்கத்தில் அந்த அணி முதல் போட்டியையும் வென்றிருந்தது. அதன்படி, தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனை கேகேஆர் அணி வசம் உள்ளது.

5 /5

ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆர்சிபி அணியிடம் இருந்தது. 2013 ஆம் ஆண்டு அந்த அணி புனே வாரியர்ஸூக்கு எதிராக 263 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் இந்த சாதனை ஐபிஎல் 2024ல் மூன்று முறை முறியடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 தொடரில் மும்பைக்கு எதிராக ஐதராபாத் அணி 277 ரன்கள் எடுத்த நிலையில், ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்கள் குவித்தது. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இந்த தொடரிலேயே 272 ரன்கள் எடுத்த கேகேஆர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.