ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய ஆசையா? இவைதான் தற்போதைய டாப் தேவைகள்

Jobs in UAE: பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள் பல பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப காத்திருக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2022, 05:06 PM IST
  • அடுத்த 3 மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா (MENA) பிராந்தியத்தில் 15 பணி இடங்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கும்.
  • பல நிறுவனங்களின் ஆக்கிரோஷமான விரிவாக்கம் காரணமாக வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது.
  • தொழில் விரிவாக்கத்திற்கு அதிக பணியாளர்கள் தேவை.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய ஆசையா? இவைதான் தற்போதைய டாப் தேவைகள்  title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவிய பிறகு, வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்தன. எனினும், தற்போது நிலைமை சீராகி வருகின்றது. வலுவான மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நடுத்தர நிலை முதல் மேல் நிலை பணிகளுக்கான காலியிடங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. பல நிறுவனங்களின் ஆக்கிரோஷமான விரிவாக்கம் காரணமாக வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது. தொழில் விரிவாக்கத்திற்கு அதிக பணியாளர்கள் தேவை. பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள் பல பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப காத்திருக்கின்றன. நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் தடயத்தை விரிவுபடுத்த விரும்பும் போது திறமையானவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகின்றன.

இருப்பினும், அடுத்த 3 மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா (MENA) பிராந்தியத்தில் 15 பணி இடங்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அவற்றை பற்றி இங்கே காணலாம்.  

- கணக்காளர் (அகௌண்டண்ட்)

- விற்பனை நிர்வாகி

- விற்பனை மேலாளர்

- இயக்குனர்

- நிர்வாக உதவியாளர்

- பணித்திட்ட மேலாளர்

- வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி

- சந்தைப்படுத்தல் மேலாளர்

- வரவேற்பாளர்

- நிர்வாக இயக்குனர்

- கட்டிட பொறியாளர்

- HR தொழில்முறை பணியாளர்

- விற்பனை நிர்வாகி

- மெக்கானிக்கல் இன்ஜினியர் 

மேலும் படிக்க | NRI Investment Options: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள் 

வேலை வாய்ப்பு இணையதளமான பேய்ட், சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுமார் 70 சதவீத நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்குள் புதிய பணியாளர்களை நியமிக்க உத்தேசித்துள்ளது தெரியவந்துள்ளது. இது தவிர, சுமார் 50 சதவீத நிறுவனங்கள் அடுத்த 3 மாதங்களில் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கை கூறியுள்ளது. 

கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்த நிறுவனங்கள் அதிகபட்சமாக ஐந்து வேலைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும். மேலும் சுமார் 25 சதவீத நிறுவனங்கள் ஆறு முதல் பத்து ஊழியர்களை பணியில் அமர்த்தும் என்று கணக்கெடுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 9 முதல் ஆகஸ்ட் 21 வரை ஆன்லைனில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் இது MENA (மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா) பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய சந்தைகளையும் உள்ளடக்கியது. பொறியியல், மேலாண்மை மற்றும் வணிகம் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைகளுக்கு மிகவும் விரும்பப்படும் கல்வித் தகுதிகள் என்பதையும் அது வெளிப்படுத்தியது. 

மேலும் திறன்களைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆமீரகத்தில் உள்ள சுமார் 51% நிறுவனங்கள் /  முதலாளிகள் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்டவர்களை விரும்புகிறார்கள் என்று பேட் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க | ரஷ்யாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதி விரைவில்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News