NRI வீட்டில் வாடகைக்கு உள்ளீர்களா? இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

Rent to NRI Landlord: என்ஆர்ஐ-க்கு வாடகை செலுத்துபவர் அனைவரும் (தனிநபர், நிறுவனம் போன்றவை) வாடகைத் தொகையில் இருந்து டிடிஎஸ் கழித்து அதை வரித்துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று இந்திய வருமான வரிச் சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2022, 01:51 PM IST
  • வெளிநாடு வாழ் இந்தியரின் (என்ஆர்ஐ) வீட்டில் வாடகைக்கு இருகிறீர்களா?
  • வாடகைத் தொகையில் இருந்து டிடிஎஸ் கழித்து அதை வரித்துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 195 இன் கீழ் குறிப்பிட்ட விதிகள் வழங்கப்பட்டுள்ளன.
NRI வீட்டில் வாடகைக்கு உள்ளீர்களா? இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் title=

நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரின் (என்ஆர்ஐ) வீட்டில் வாடகைக்கு இருந்து, அவருக்கு ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்தினால், வாடகை செலுத்தும் முன் TDS (மூலத்தில் கழிக்கப்பட்ட வரி) கழிக்க வேண்டும். என்ஆர்ஐ-க்கு வாடகை செலுத்துபவர் அனைவரும் (தனிநபர், நிறுவனம் போன்றவை) வாடகைத் தொகையில் இருந்து டிடிஎஸ் கழித்து அதை வரித்துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று இந்திய வருமான வரிச் சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 195 இன் கீழ் குறிப்பிட்ட விதிகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடு வாழ் இந்தியருக்கு வட்டித் தொகையோ அல்லது வேறு எந்தத் தொகையோ செலுத்தும் நபர்கள், அந்த தொகையை செலுத்தும்போது, அது ரொக்கமாக இருந்தாலும், காசோலையாக இருந்தாலும், டிமாண்ட் டிராஃப்டாக இருந்தாலும், வேறு எந்த வழியில் இருந்தாலும், நடைமுறையில் உள்ள விகிதங்களில் வருமான வரியை கழிக்க வேண்டும்.

எவ்வளவு வரி கழிக்கப்பட வேண்டும்?

மாத வாடகைத் தொகையை சாராமல் வரி கழிக்கப்பட வேண்டும் என்று வரிச் சட்டங்கள் கூறுகின்றன. அதாவது, நீங்கள் மாதத்திற்கு ரூ.15,000 வாடகை செலுத்தினாலும் அல்லது ரூ.50,000 வாடகை செலுத்தினாலும், வாடகை செலுத்தும் முன் வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும். வீட்டு உரிமையாளருக்கு பணம், காசோலை அல்லது வேறு எந்த முறையில் வாடகை செலுத்தப்பட்டாலும் TDS பொருந்தும்.

மேலும் படிக்க | ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய NRI-கள் தேர்ந்தெடுக்கும் டாப் நகரங்கள் 
 
வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுப்பவர் எந்த வரி விகிதத்தில் வாடகை செலுத்த வேண்டும்? 

நடப்பில் உள்ள விகிதங்கள் அல்லது வருடாந்திர யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தற்போதைய வரி விகிதங்களில் வாடகைக்கு இருப்பவர் டிடிஎஸ்-ஐ கழிக்க வேண்டும். தற்போது, ​​இந்தியாவில் அமைந்துள்ள வீட்டுச் சொத்தின் வாடகை வருமானத்தின் மீதான டிடிஎஸ் வரி விகிதம் 30 சதவீதமாக உள்ளது. செலுத்தப்படும் வாடகையின் அளவைப் பொறுத்து பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவற்றுடன் வரி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். அதிகபட்ச விகிதம் 42.744 சதவீதமாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, வெளிநாடு வாழ் இந்தியரின் இந்திய வீட்டில் இருக்கும் ஒரு நபர் வாடகையாக ரூ.50,000 கொடுத்து, அந்த என்ஆர்ஐ-ன் 30 சதவீத அதிகபட்ச வரி விகிதத்தின் வரம்பில் வந்தால், வாடகை செலுத்தும் நபர், ரூ.21,372 (ரூ. 50,000-ல் 42.74 சதவீதம்) வரியைக் கழிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்தும் முன் இதை கழிக்க வேண்டும். என்ஆர்ஐ வீட்டு உரிமையாளருக்கு கூடுதல் கட்டணம் பொருந்தாது என்றால் (வருமானம் வரம்புக்குக் கீழே இருப்பதால்), அவர் பொருத்தமான வரி விகிதங்களில் வரியைக் கழிக்க வாடகைக்கு இருப்பரிடம் தெரிவிக்க வேண்டும். 

மேலும் படிக்க | NRI ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா? முழு செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News