கனடாவில் தொடரும் என்.ஆர்.ஐ கொலைகள்! 24 வயது சீக்கிய இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் பலி

NRI Shot Dead In Canada: கனடாவின் ஆல்பர்ட்டாவில் சன்ராஜ் சிங் என்ற 24 வயது சீக்கியர் சுட்டுக் கொல்லப்பட்டார்... கனடாவில் சீக்கியர்களின் படுகொலைகள் தொடர்கதையாகிவிட்டது.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 13, 2022, 06:50 AM IST
கனடாவில் தொடரும் என்.ஆர்.ஐ கொலைகள்! 24 வயது சீக்கிய இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் பலி title=

ஆல்பர்ட்டா: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் 24 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு  உயிரிழந்தார். இது கனடா வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி கனடாவில் இரவு 8:40 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக அங்கு சென்றனர். தென்கிழக்கு எட்மண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட்ட சன்ராஜ் சிங்கை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். கனடாவில் சீக்கியர்களின் படுகொலைகள் தொடர்கதையாகிவிட்டது.  

தெருவில் காயங்களுடன் சன்ராஜ் சிங்கை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உடனடியாக போலீசார் CPR ஐ வழங்கினர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக அவசர மருத்துவ சேவைகள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | காபூலில் ஒரு ‘26/11’ தாக்குதல்; ஹோட்டலின் ஜன்னல்களில் இருந்து குதிக்கும் மக்கள்!

கொலை நடந்த போது அப்பகுதியை விட்டு வாகனம் ஒன்று சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த போது அந்த இடத்தை விட்டு வெளியேறிய வாகனத்தின் புகைப்படத்தை புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். வாகனம் அடையாளம் காணப்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

வாகனம் மற்றும் அதில் பயணித்தவர்களை அடையாளம் கண்டால், இந்த வழக்கு விரைவில் முடிந்துவிடும் என்றும், தகவல் தெரிந்தவர்கள்  780-423-4567 அல்லது #377 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

டிசம்பர் 3 அன்று கனடாவின் மிசிசாகாவில் உள்ள எரிவாயு நிலையத்தில் 21 வயதான சீக்கியப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். திங்களன்று பீல் பிராந்திய காவல்துறை பாதிக்கப்பட்ட என்.ஆர்.ஐ பெண் பவன்ப்ரீத் கவுர் என்று அடையாளம் கண்டு, அவர் எரிவாயு நிலையத்தின் ஊழியர் என்று சிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க | திருமண பரிசாக கழுதை குட்டி... யூ-ட்யூப் பிரபலங்களின் திருமணத்தில் கலகல! - காரணம் என்ன?

CBC செய்தி அறிக்கையின்படி, சனிக்கிழமை இரவு 10:40 மணியளவில் (உள்ளூர் நேரம்) கிரெடிட்வியூ சாலை மற்றும் பிரிட்டானியா சாலைக்கு அருகில் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு வந்த பொலிசார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டனர். செய்தி அறிக்கையின்படி, உயிர்காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, இருப்பினும், பெண் உயிரிழந்துவிட்டார்.. இது குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவம் என நம்புவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, புதன்கிழமை இரவு கனடாவின் சர்ரேயில் வசிக்கும் சீக்கியப் பெண் 40 வயதான ஹர்பிரீத் கவுர், தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவரது கணவர் கைது செய்யப்பட்டார், ஆனால் இது கொலை என்றும், கணவர் மீது தவறில்லை என்று தெரிந்ததும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படி கனடாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கொலை செய்யப்படும் போக்கு அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

மேலும் படிக்க | Invisibility Cloak: ஜீபூம்பா! கேமராக்களுக்கு ஆப்பு வைக்கும் மேஜிக் ‘மாயஜால கோட்’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News