இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு எளிமையான விசா செயல்முறைகள்

Visa for Indians: இங்கிலாந்து முதல் ரஷ்யா வரை, அனைத்து நாடுகளும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக நுழைவு அனுமதி பெறுவதற்கான வழிகளை வழங்குவதில் ஆர்வமாக உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 8, 2023, 12:57 PM IST
  • யுகே மற்றும் இந்தியா இளம் வல்லுநர்கள் திட்டத்தை (YPS) அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இதன் கீழ், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்திய மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் இரண்டு வருடங்கள் வரை இரு நாடுகளிலும் வசிக்கவும் வேலை செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
  • விசாவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இளங்கலை பட்டம் மற்றும் அவர்கள் தங்குவதற்கு போதுமான நிதி உட்பட குறிப்பிட்ட அளவுகோல்கள் உள்ளன.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு எளிமையான விசா செயல்முறைகள்  title=

இந்தியர்களுக்கு விசா விண்ணப்ப செயல்முறையை எளிமையாக்க உலகம் முழுவதும் உள்ள நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிலாந்து முதல் ரஷ்யா வரை, அனைத்து நாடுகளும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக நுழைவு அனுமதி பெறுவதற்கான வழிகளை வழங்குவதில் ஆர்வமாக உள்ளன. சுற்றுலாவாகவோ, அல்லது வேலை நிமித்தமாக இந்தியர்கள் வந்தாலோ, அவர்களுக்கு எளிதாக விசா கிடைப்பதை உறுதி செய்ய நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. 

நுழைவு அனுமதிகளைப் பெற விரும்பும் இந்தியர்களுக்கு விசா செயல்முறைகளை எளிதாக்குவதற்கான திட்டங்கள் அல்லது நோக்கங்களை அறிவித்த நான்கு நாடுகள் பற்றி இங்கே காணலாம்: 

1. இங்கிலாந்து

யுகே மற்றும் இந்தியா இளம் வல்லுநர்கள் திட்டத்தை (YPS) அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் கீழ், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்திய மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் இரண்டு வருடங்கள் வரை இரு நாடுகளிலும் வசிக்கவும் வேலை செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இளங்கலை பட்டம் மற்றும் அவர்கள் தங்குவதற்கு போதுமான நிதி உட்பட குறிப்பிட்ட அளவுகோல்கள் உள்ளன.

இந்திய ஹை கமிஷனின் இணையதளம் விண்ணப்பதாரர்களுக்கான விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டணமாக 720 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விஎஃப்எஸ் குளோபல் விசா சேவை வழங்குநர் மூலம் E-1 விசாவின் கீழ் விண்ணப்பம் செய்யப்பட உள்ளது. இதன் நோக்கம் "இந்தியா-யுகே YPS திட்டத்தின் கீழ் விண்ணப்பம்" எனக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு விண்ணப்பதாரரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு வைத்திருக்கும் ரூ.250,000க்கு சமமான நிதியைக் காட்ட வேண்டும்.

2. அமெரிக்கா

இந்தியாவில் அமெரிக்க விசாக்களுக்கான நீண்ட காத்திருப்பு நேரங்களை பற்றி கூறிய அமெரிக்க அதிகாரி ஒருவர், இந்த தேக்க நிலையை சரி செய்ய நாடு உறுதிபூண்டுள்ளதாக கூறினார். 

இந்த ஆண்டின் பிற்பகுதியில், எச்-1 மற்றும் எல்-1 விசா உள்ளிட்ட விசா புதுப்பித்தல்களுக்காக விசா ஸ்டாம்பிங் திட்டத்தை அமெரிக்கா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் சில வகைகளில் உள்நாட்டு விசா மறுமதிப்பீட்டை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் உள்ளன என்று வெளியுறவுத்துறை பிரதிநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்னும் பல முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், சில தற்காலிக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விப் பரிமாற்ற பார்வையாளர்களுக்கான நேர்காணல் தள்ளுபடி செயல்முறையை துறை விரிவுபடுத்துகிறது என்றார்.

தொழில் நிமித்தமாக வேறொரு நாட்டிற்குச் செல்லும் இந்திய விண்ணப்பதாரர்கள் அமெரிக்க விசாவிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, அந்த அதிகாரி, "மற்ற அமெரிக்க தூதரகங்கள் இந்திய விசா விண்ணப்பதாரர்கள் அங்கு பயணம் செய்ய விரும்பினால், குறிப்பாக அவர்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டோம். " என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | 'One Touch' கோல்டன் விசா சேவையை அறிமுகம் செய்தது ஐக்கிய அரபு அமீரகம்

3. ஜெர்மனி

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிப்ரவரியில் இந்தியாவுக்கு பயணம் செய்தபோது, திறமையான தொழிலாளர் பற்றாக்குறையால் நாடு போராடுவதால், இந்தியாவில் இருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஜெர்மனியில் பணி விசா பெறுவதை எளிதாக்க தனது அரசாங்கம் விரும்புகிறது என்று கூறினார்.

சட்ட கட்டமைப்பை மேம்படுத்துவது, மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திறன் கொண்டவர்களுக்கு ஜெர்மனி மிகவும் கவர்ச்சிகரமான வாய்ப்புள்ள நாடாக மாறும் என்று ஷால்ஸ் கூறினார்.

"விசா வழங்குவதை எளிதாக்க விரும்புகிறோம்," என்று அவர் இந்தியாவின் உயர் தொழில்நுட்ப மையமான பெங்களூருக்கு சென்றபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"சட்டப்பூர்வ நவீனமயமாக்கலைத் தவிர, முழு அதிகாரத்துவ செயல்முறையையும் நவீனப்படுத்த விரும்புகிறோம்," என்று ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.

ஜெர்மனிக்கு வரும்போது அந்த மொழியைப் பேசத் தெரியாத தொழிலாளர்கள் பற்றிக் கேட்டதற்கு, ஆங்கிலம் பேசும் திறமையோடு முதலில் ஜெர்மனிக்கு வந்து பின்னர் ஜெர்மன் மொழியை கற்ருக்கொள்ளலாம், அதனால் பிரச்சனை இல்லை என கூறினார். 

4. ரஷ்யா

இந்தியா, சிரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான விசா நடைமுறைகளை தளர்த்துவதில் ரஷ்யா செயல்பட்டு வருகிறது என்று மாநில TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

"இந்தியாவைத் தவிர (செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்) ... அங்கோலா, வியட்நாம், இந்தோனேசியா, சிரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்று இவானோவ் கூறினார்.

முன்னதாக, சவுதி அரேபியா, பார்படாஸ், ஹைட்டி, ஜாம்பியா, குவைத், மலேசியா, மெக்சிகோ மற்றும் டிரினிடாட் உள்ளிட்ட 11 நாடுகளுடன் விசா இல்லாத பயணங்களுக்கான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களையும் ரஷ்யா தயாரித்து வருவதாக இவானோவ் கூறியதாக டாஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | NRI பான் - ஆதார் இணைக்க வேண்டுமா? இவர்களுக்கு விலக்கு உள்ளதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News