Canada PR: நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா

Canadian Permenant Residency: தேசிய தொழில்சார் வகைப்பாடு 2021 என்ற விதியை, குடியுரிமை திட்டங்களுக்காக, கனடா செயபடுத்தியுள்ளது. இதன்மூலம் கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கானவர்களின் பட்டியலில் 16 தொழில்களை சேர்ந்தவர்களும் இடம் பெறுகின்றனர்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2022, 06:12 PM IST
  • நிரந்தர குடியுரிமைகான விதிகளை தளர்த்தியது கனடா
  • தொழில் அடிப்படையில் தேவைகளுக்கு ஏற்ப விதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்
  • இனி கனடாவில் மேலும் அதிக தொழிலாளர்கள் குடியேறலாம்
Canada PR: நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா title=

கனடாவில், இனி நிரந்தர குடியிருப்பாளர்களை தேர்வு செய்யும் வழிமுறை, இதுவரை இருந்த விதிகளில் இருந்து மாறியதாக இருக்கும். தேசிய தொழில்சார் வகைப்பாடு 2021 என்ற விதியை, குடியுரிமை திட்டங்களுக்காக, கனடா செயபடுத்தியுள்ளது. இதன்மூலம் கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கானவர்களின் பட்டியலில் 16 தொழில்களை சேர்ந்தவர்களும் இடம் பெறுகின்றனர். தேசிய தொழில் வகைப்பாடு என்பது, கனடாவில் ஒரு தொழில் செய்ய அல்லது வேலையில் சேர்வதற்கான திறன் மற்றும் கல்வித் தகுதியை கண்டறியும் வழிமுறை ஆகும். 

நிரந்தர குடியுரிமை கோருபவர்களின் விண்ணப்பங்களை இதன் அடிப்படையிலேயே கனடா தேர்ந்தெடுக்கிறது. பொதுவாக, கனடாவில் குடியுரிமை பெறுவதற்குக் விண்ணப்பிப்பவர்களுக்கு, வேலை மற்றும் கல்வித் தகுதி அடிப்படை அளவுகோலாக பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அரசு இந்த வழிமுறைகளை பின்பற்றுகிறது. குறிப்பாக, சுகாதாரம், பாதுகாப்பு, கட்டுமானம், போக்குவரத்து ஆகிய துறைகளில் திறமை மிகுந்தவர்கள் கனடாவுக்கு தேவை.

மேலும் படிக்க | 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!

நாட்டின் பொருளாதாரத்தையும் வளமான எதிர்காலத்தையும் உறுதி செய்ய வலுவான பணியாளர்கள் நாட்டுக்கு தேவை என்று, கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, கனடாவில் வெளிநாட்டினர் குடியுரிமை பெற நான்கு திறன்நிலைகள் இருந்தன.
பல்கலைக்கழக பட்டங்கள் தேவைப்படும் பணிகள்
திறமையான தொழில்களில் வேலைகள் செய்வதற்கான டிப்ளமோ படிப்பு
இடைநிலை திறன்கள் அலல்து வேலைசார்ந்த பயிற்சி தேவைப்படும் வேலைகள் மற்றும் பயிற்சி தேவைப்படும் தொழிலாளர்கள் வேலைகள்

இத்துடன் தற்போது புதிதாக 16 தொழில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ 

புதிதாக தகுதி பெற்ற தொழில்கள்

ஊதிய நிர்வாகிகள்
பல் மருத்துவ உதவியாளர்கள், பல் மருத்துவம் தொடர்பான ஆய்வக உதவியாளர்கள்
செவிலியர் உதவியாளர்கள், ஆர்டர்லிகள், நோயாளிகளுக்கு சேவை வழங்குபவர்கள்
மருந்தக தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் மருந்த்க உதவியாளர்கள்
ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள்
சீர்திருத்த சேவை அதிகாரிகள்
சட்ட அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிஅக்ள்
அழகியல் நிபுணர்கள்
குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள்
பழுதுபார்ப்பாளர்கள் மற்றும் சேவையாளர்கள்
டிரக் டிரைவர்கள்
கனரக வாகன இயக்குநர்கள்
பேருந்து ஓட்டுநர்கள், சுரங்கப்பாதை மற்றும் போக்குவரத்து ஆபரேட்டர்கள்
விமான அசெம்பிளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்

மேலும் படிக்க | நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News