ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்திய மாணவர்களுக்கு கொடுத்த உறுதி

Australia - India Education: கல்வித்துறையில், இந்தியப் பட்டங்கள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படுவது தொடர்பான விஷயங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் முக்கியமான விஷயம் ஆகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 9, 2023, 02:28 PM IST
  • இந்தியப் பட்டங்கள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும்
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உறுதியளித்த ஆஸ்திரேலிய பிரதமர்
  • ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்திய வருகை
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்திய மாணவர்களுக்கு கொடுத்த உறுதி title=

நியூடெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பாரம்பரிய ஹோலி பண்டிகையில் பங்கேற்றார். கல்வித்துறையில், இந்தியப் பட்டங்கள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படுவது தொடர்பான விஷயங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

கல்வி தகுதி அங்கீகார பொறிமுறை 
இந்தியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அல்பானீஸ், குஜராத்தின் காந்திநகரில் உள்ள GIFT சிட்டியில் ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் சர்வதேச கிளை வளாகத்தை அமைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

புதன்கிழமை (2023, மார்ச் 8) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அரசாங்கம் இணைந்து `ஆஸ்திரேலியா-இந்தியா கல்வித் தகுதி அங்கீகார பொறிமுறையை' இறுதி செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.

மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

குஜராத்தின் காந்திநகரில் உள்ள GIFT சிட்டியில் ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் சர்வதேச கிளை வளாகத்தை அமைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிறார்.

“எங்கள் இருதரப்பு கல்வி உறவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியா கல்வித் தகுதி அங்கீகார பொறிமுறையை நாங்கள் இறுதி செய்துள்ளோம் என்பதை உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை, பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசும் ஒன்றாக பார்த்து ரசிக்க உள்ளது ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Yuri Gagarin: முதன்முதலில் விண்வெளி சென்ற யூரி ககாரின்... போராட்டமும் பேரார்வமும் நிறைந்த வீரரின் கதை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது.

75 ஆண்டுகளாக கிரிக்கெட் மூலம் ஆஸ்திரேலியா உடன் நட்பு தொடர்வதை கொண்டாடும் வகையில், இரு நாட்டு பிரதமர்களும் இன்று இப்போட்டியை தொடங்கி வைத்தனர். அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசி ஆகியோர் மைதானம் முழுவதும் வாகனம் ஒன்றில் வலம் வந்தனர்.

மேலும் படிக்க | NRI Judge In USA: நியூயார்க்கில் மாவட்ட நீதிபதியாகிறார் தமிழர் அருண் சுப்பிரமணியன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News