கனடா செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய அரசாங்கம்

குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் இந்திய அரசாங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2022, 03:24 PM IST
  • கனடா சென்று படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி.
  • கனடாவில் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் மீது இன்னும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சகம்.
  • இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பயணம்/கல்விக்காக கனடாவுக்குச் செல்பவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனடா செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய அரசாங்கம் title=

புதுடெல்லி: கனடா சென்று படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி!! கனடாவில் ஹேட் க்ரைம்ஸ் எனப்படும் வெறுப்பின் காரணமாக செய்யப்படும் குற்றங்கள் அதிகமாகி வருவதால், கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் அதிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என இந்தியா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. வெறுப்பின் காரணமாக செய்யப்படும் குற்றங்கள், மதவெறி வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற சம்பவங்கள் பற்றி வெளியுறவு அமைச்சகம் கனடா அரசாங்கத்துடன் பேசி வருவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "கனடாவில் இந்த குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "கனடாவில் இந்த குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் மீது இன்னும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் அனைத்தும் ஆண்டு இறுதிக்குள் பரிசீலிக்கப்படும்: கனடா 

"மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பயணம்/கல்விக்காக கனடாவுக்குச் செல்பவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அந்த அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள இந்திய பிரஜைகள் மற்றும் மாணவர்களை ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள தூதரகங்களில் பதிவு செய்யுமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது, "எந்தவொரு தேவை அல்லது அவசரநிலை ஏற்பட்டாலும், இந்திய உயர் தூதரகம் மற்றும் தூதரக ஜெனரல் கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுடன் எளிதாக, சிறப்பான வகையில் தொடர்பு கொள்ள உதவும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய ஆசையா? இவைதான் தற்போதைய டாப் தேவைகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News