மனமுடைந்து பாேன ரகுராம்-மாயா, சீனு எடுத்த அதிரடி முடிவு! சந்தியா ராகம் அப்டேட்!

Sandhya Raagam Episode Update Today : வருத்தத்துடன் ரகுராம் சொன்ன வார்த்தை.. மாயா, சீனு எடுத்த முடிவு - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்  

Written by - Yuvashree | Last Updated : May 9, 2024, 11:15 AM IST
  • சந்தியா ராகம் அப்டேட்
  • ஜீ தமிழில் இரவு 9:30 மணிக்கு பார்க்கலாம்
  • இன்று நடக்க இருக்கும் ட்விஸ்ட் என்ன?
மனமுடைந்து பாேன ரகுராம்-மாயா, சீனு எடுத்த அதிரடி முடிவு! சந்தியா ராகம் அப்டேட்! title=

Sandhya Raagam Episode Update Today : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்‌. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனத்தின் வெற்றியைப் பார்த்து சந்தோஷப்பட்ட ரகுராம் ஜானகியிடம் ஒரு வார்த்தை கூட பேசாத இலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஜானகி ரகுராம் தன்னிடம் பேசாமல் போனதால் வருத்தப்பட மாயா மற்றும் சீனு அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று ஆறுதல் சொல்லியும் ஜானகி மனம் கலக்கத்திலேயே உள்ளது. 
 
இதையடுத்து ரகுராம் இவர்கள் அனைவரையும் காரில் அழைத்துக் கொண்டு வரும்போதும் ஜானகியிடம் பேசாமல் வருகிறார். வீட்டுக்கு வந்த ரகுராம் சிவராமனை அவனது மனைவியிடம் மன்னிப்பு கேட்க சொல்ல ரமணி அம்மா என்ன நடந்தது என்று கேட்டு அறிந்து கொள்கிறாள். 

மேலும் படிக்க | குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?

Sandhya Raagam

தனம் விளையாடியது தெரிந்ததும் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிபட்டு வராது நமக்கு கலாச்சாரத்திற்கு ஒத்து வராது என்று சொல்ல அவரை தடுத்து நிறுத்தும் ரகுராம் இந்த வீட்ல இருக்க எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும்னு மட்டும்தான் நான் நெனச்சேன் அவளுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா இருக்கணும்னு நினைக்கல, எல்லோரும் அவங்க விருப்பத்துக்கு இருக்கட்டும் ஆனால் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யுங்க என்று சொல்லி சென்று விடுகிறார். 

அடுத்ததாக மாயா மற்றும் சீனு மொட்டை மாடியில் ரகுராம் எவ்வளவு நல்லவரா இருக்காரு இன்னைக்கு தனத்தை புரிஞ்சுகிட்டு அவளை விளையாட அனுமதிச்சாரு. அதே மாதிரி சரியான நேரமாக பார்த்து நம்முடைய காதலை சொல்லி கல்யாணம் பற்றி பேசினால் நிச்சயம் நம்முடைய காதலையும் புரிந்து கொள்வார் என்று ரகுராமிடம் காதலைப் பற்றி சொல்ல முடிவெடுக்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! அட, இந்த நடிகரா..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News