ஏமாலி படத்தின் டீஸர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

Last Updated : Nov 10, 2017, 12:13 PM IST
ஏமாலி படத்தின் டீஸர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது title=

லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில்‘ஏமாலி’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அறிமுக ஹீரோ சாம் ஜோன்ஸ், அவருக்கு நாயகியாக அதுல்யா ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம்டி.ராஜ் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏமாலி படத்தின் டீஸர் கடந்த நவம்பர் 3-ம் தேதி, நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். இந்த படத்தின் டீஸர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் படத்தின் 1 மில்லியன் டிஜிட்டல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Trending News