‘விவேகம்’ வெளியீடு: திருப்பதியில் தரிசனம் செய்த ‘தல அஜித்’ -படங்கள் பார்க்க

Last Updated : Jul 18, 2017, 02:53 PM IST
‘விவேகம்’ வெளியீடு: திருப்பதியில் தரிசனம் செய்த ‘தல அஜித்’ -படங்கள் பார்க்க title=

அஜீத் நடித்த ‘விவேகம்’ ஆகஸ்ட் 10ம் தேதி கண்டிப்பாக வெளியாகிறது என படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில், சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள ‘விவேகம்’ அஜீத்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

‘விவேகம்’  படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விவேகம்‘  அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் தணிக்கை குழுக்கு படத்தை அனுப்ப உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அஜீத்குமார் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்யும் புகைப்படங்களை, அவரது ரசிகர் ஆன்லைனில் பகிர்ந்து உள்ளனர். தற்போது இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன. 

 

 

Latest Pics of #THALA #AJITH #AJITHKUMAR at Tirupathi Temple #ajithkumarfc @ajithkumarfc

A post shared by AJITHKUMAR FANS CLUB (@ajithkumarfc) on

 

‘விவேகம்’ படத்தின் வியாபாரமும் அமோகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News