8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதிக்கொள்ளும் விஜய் - அஜித் படங்கள்!

மே தின சிறப்பு நாளில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரின் படங்களும் தொலைக்காட்சியில் திரையிடப்பட இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2022, 09:33 AM IST
  • ஜில்லா மற்றும் வீரம் படங்கள் ஒரே நாளில் வெளியானது.
  • அதன் பிறகு 8 வருடங்களாக ஒரே தேதியில் வெளியாக வில்லை.
  • தற்போது தொலைக்காட்சியில் ஒரே தேதியில் வெளியாக உள்ளது.
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதிக்கொள்ளும் விஜய் - அஜித் படங்கள்! title=

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களையும், பல வெற்றி படங்களையும் கொடுத்து முன்னணி கதாநாயகர்களாக திகழும் இரு ஜாம்பவான்கள் விஜய் மற்றும் அஜித்.  இவர்கள் இருவருக்கும் ஆண், பெண் என இருபால் ரசிகர்களும் ஏராளமாக உள்ளனர், இந்த இருவரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போதும் அன்றைய தினம் திருவிழா போல மக்கள் வெள்ளம் அலைமோதும்  என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  அதேபோன்று இந்த இரு கதாநாயகர்களின் ரசிகர் கூட்டங்களுக்கு இடையே நடக்கும் சண்டை சச்சரவுகளும் நன்கு அறிந்த விஷயம்.  இணையத்தில் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் பற்றியும், விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் பற்றியும் ஏதேனும் பேசி இணையதளத்தை போர்க்களமாக மாற்றும் சம்பவம் காலங்காலமாக நடந்து வருகிறது.

Valimai

மேலும் படிக்க | சிம்புபின் வெந்து தணிந்தது காடு படத்தில் சமந்தா?

ஆனால் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்தாலும், யார் ஹீரோ பெரியவர் என்கிற மோதல் இருந்து வருகிறது.  தற்போது 8 வருடங்களுக்கு பிறகு விஜய், அஜித் இருவரின் படங்களும் ஒரே நாளில் மோதப்போகிறது.  கடந்த 2014ம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படமும், அஜித் நடிப்பில் வெளியான வீரம் படமும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகி மோதிக்கொண்டது.  இந்த மோதலை தொடர்ந்து இரு நடிகர்களும் தங்களது படங்களை வெவ்வேறு தேதிகளில் வெளியிட திட்டமிட்டு, அதன்படி தங்கள் படங்களை வெவ்வேறு நாட்களில் வெளியிட்டு வந்தனர்.

jillaveeram

இந்நிலையில் மே சிறப்பு தினத்தில் இந்த இருவரின் படங்கள் வித்தியாசமான முறையில் வெளியாகிறது.  அதாவது வெள்ளித்திரையில் இல்லாமல், சின்னத்திரையில் இருவரின் படங்களும் வெளியாகிறது. மே-1ம் தேதியன்று சன் தொலைக்காட்சியில் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையிடப்பட இருக்கிறது, அஜித்தின் பிறந்தநாளான அதே தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் திரையிடப்பட இருக்கிறது.

 

மேலும் படிக்க | கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News