வாகா எல்லையில் தல அஜித்; வைரலாகும் புகைப்படங்கள்

இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித் பயணம் செய்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2021, 06:25 AM IST
வாகா எல்லையில் தல அஜித்; வைரலாகும் புகைப்படங்கள் title=

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி இருக்கிறது. எச்.வினோத் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

வரும் பொங்கல் தினத்தையொட்டு அடுத்த ஆண்டு வலிமை (Valimai) திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார். 

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித் (Ajith Kumar) தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அங்கு எல்லையில் ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் நடிகர் அஜித் உரையாடியுள்ளார். பின்னர் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் புகைப்படம் ஒன்றை நடிகர் அஜித் எடுத்துக்கொண்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

 

நடிகர் அஜித்தோடு உரையாடியதோடு ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். பின்னர் உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்து ஆலோசித்துள்ளார்.

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News