ஷாலினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..! அஜித்திற்கு பிடித்த ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் எது தெரியுமா?

Ajith Favourite Song: நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, தனது கணவருக்கு பிடித்த பாடலை வீடியோ மூலமாக சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்ன பாடல் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 29, 2023, 03:11 PM IST
  • ஷாலினி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடர்ந்தார்.
  • அதிலிருந்து அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
  • அஜித்திற்கு பிடித்த பாடல் குறித்த தகவலி வெளியிட்டுள்ளார்.
ஷாலினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..! அஜித்திற்கு பிடித்த ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் எது தெரியுமா? title=

நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி, தனது கணவர் விரும்பு ரசிக்கும் பாடல் எது என்பதை வீடியாே பதிவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அஜித்-ஷாலினி:

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேரட் ஆன ஜோடிகளுளின் பட்டியலில் முக்கிய இடத்தில இருப்பவர்கள் அஜித்-ஷாலினி. 1999ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அமர்களம் படத்தில் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். சில மாதங்களாக காதலித்து வந்த இவர்கள், 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனெளஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

கேமராவிடமிருந்து தள்ளியிருக்கும் அஜித்..

நடிகர் அஜித் குமார் படத்தில் நடிக்கும் நேரங்களை தவிர, பிற நேரங்களில் கேமராவை விட்டு தள்ளியே இருப்பார். தனது தனிப்பட்ட வாழ்வை எதிலும் பகிர விரும்பாதவர் அஜித். திரை வாழ்க்கைக்கு வந்த புதிதில் நேர்காணல்கள் மற்றும் படவிழாக்களில் கலந்து கொண்டிருந்த அவர், பிறகு எந்தவித விழாக்களில் கலந்து கொள்வதையும் நிறுத்திவிட்டார். இவரைப்போலவே இவரது குடும்பத்தினரும் சமூக வலைதளங்களில் கணக்கு ஏதும் வைத்திராமல் இருந்தனர். இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென ஒரு தனி கனக்கை ஆரம்பித்தார். 

மேலும் படிக்க | இந்தியன் 3 திரைப்படம் தயாராகுமா? உதயநிதி ஸ்டாலின் சொன்ன அருமையான தகவல்..!

இன்ஸ்டாவில் ஷாலினி..

நடிகை ஷாலினி இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கியவுடன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள், தன் குழந்தைகளின் புகைப்படங்கள், தன் கணவரின் புகைப்படங்கள் என அனைத்தையும் பதிவிட்டு வந்தார். அவ்வப்போது அஜித்தின் வீடியாக்களையும் தனது ஸ்டோரி செக்ஷனில் பதிவிடுவார். அப்படி அவர் பதிவிட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. 

அஜித்-ஷாலினி வைரல் வீடியோ:

நடிகர் அஜித்தும் ஷாலினியும் காரில் எங்கோ Long Drive சென்றுக்கொண்டிருப்பதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அஜித் கார் ஓட்டிக்கொண்டிருப்பதும், காரில் ஒரு பாட்டு ஓடிக்கொண்டிருப்பதும் பதிவாகியிருந்தது. அது ‘இசைபுயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த பாடல். 

அஜித்திற்கு பிடித்த பாடல்..

அஜித் நடித்து 1994ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், ‘பவித்ரா’. இந்த படத்தில் ராதிகா, நாசர், லூஸ் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் “உயிரும் நீயே உலகமும் நீயே..” என்ற பாடல் இடம் பெற்றிருக்ககும். இதை உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். இந்த பாடலை, தனது காரில் ஓடவிட்டபடி ஷாலினியுடன் பயணம் செய்துள்ளார் அஜித். “நெடுந்தூர பயணத்தின் போது அவர் ரசிக்கும் பாடல்..” என ஷாலினி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியாேவும் பாடலும் வைரலாகி வருகின்றன. 

அஜித்தின் அடுத்த படம்..

கடைசியாக ‘துணிவு’ படத்தில் நடித்த அஜித், அப்படம் மூலம் ஹெச்.விநோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்தார். தற்போது அவர், பிரபல இயக்குநர் மகிழ்திருமேனியின் ‘விடா முயற்சி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இதுகுறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இந்த படத்தை அடுத்து, ‘கங்குவா’ படத்தில் பிசியாக உள்ள சிறுத்தை சிவாவுடன் அஜித் மீண்டும் கைக்கோர்க்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இவர்கள் இதற்கு முன்னர் ஒன்றாக ‘விஸ்வாசம்’ படத்தில் இணைந்து நடித்தனர். 

மேலும் படிக்க | மன்னனாக மகுடம் சூடினாரா மாரி செல்வராஜ்? மாமன்னன் திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News