சீதாவுக்கு வந்த சிக்கல்.. நான்சி வைத்த ஆப்பு - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Sitaraman Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் சீரியலில் சீதாவை சிக்க வைக்க நான்சி பக்கவாக திட்டம் போட்டுள்ளார். அதனை சீதா எப்படி முறியடிக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 15, 2024, 03:01 PM IST
  • சீதாராமன் சீரியலில் அடுத்த டிவிஸ்ட்
  • சீதாவை சிக்க வைக்க நான்சி போட்ட பிளான்
  • நேரடியாக கைது செய்ய வரப்போகும் போலீஸ்
சீதாவுக்கு வந்த சிக்கல்.. நான்சி வைத்த ஆப்பு - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட் title=

தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா எக்ஸ்போர்ட் கம்பெனியில் துணி தைக்கும் விஷயம் நான்சிக்கு தெரியவந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ராம் குவாலிட்டியை செக் செய்து கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டே தையுங்கள் சில இடங்களில் கரை இருப்பதாக சொல்ல அதைக் கேட்டு பெண்களும் சரிங்க சார் இனிமே ஒழுங்கா செய்கிறோம் என சொல்கின்றனர். 

மேலும் படிக்க | OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! முழு லிஸ்ட்..

மறுபக்கம் நான்சி அவங்க யாரும் ப்ரொபஷனல் டைலர்ஸ் கிடையாது. அவங்க வேலை செய்றத தடுத்து நிறுத்திட்டா சீதா ஆட்டோமேட்டிக்கா தோத்து போய்டுவா என்று அர்ச்சனா மற்றும் சுபாஷ் சிவன் பேச இதை தூரமாக இருந்து பார்க்கும் செல்வியும் ராமின் தங்கைகளும் இவங்க ஏதோ பிளான் பண்றாங்க என்பதை புரிந்து கொள்கின்றனர். அடுத்ததாக நான்சி மற்றும் அர்ச்சனா என இருவரும் சேர்ந்து ஒரு லேடி போலீஸ் சந்தித்து பணத்தை கொடுத்து சீதாவிடம் வேலை செய்பவர்கள் திரும்பவும் வேலைக்கு வராத மாதிரி தடுத்து நிறுத்தனும் என சொல்ல லேடீஸ் போலீஸ் நான் பார்த்துக்கிறேன் மேடம் என இவர்களை அனுப்பி வைக்கிறார். 

அடுத்ததாக எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை முடிந்து எல்லோரும் ஆட்டோவிற்காக காத்திருக்க சீதாவும் அவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக காத்திருக்கிறாள். அதன்பிறகு இவர்கள் ஆட்டோவில் ஏறிச்செல்ல இதைபார்த்த லேடி கான்ஸ்டபிள் ஒருவர் லேடி போலீசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் வழியில் ஆட்டோவில் நிறுத்தி உங்களை பார்த்த சந்தேகமா இருக்கு என்று எல்லோரையும் கூண்டோட ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

பிறகு நான்சிக்கி போன் செய்து சில நகை திருட்டு கேஸ் எல்லாம் பெண்டிங்-ல இருக்கு அதை எல்லாம் இவங்க மேல தூக்கி போட்டா 15 நாளைக்கு வெளியவே வர முடியாது என சொல்கிறார். அடுத்து நான்சி தூக்கம் வராமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க அதை பார்த்த சீதா என்ன தோத்திடுவோம்னு பயம் வந்துருச்சா என்று கேட்க யார் தோற்க போறா?, யார் ஜெயிக்க போறானு?, நாளைக்கு தெரிஞ்சிடும் என பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News