சந்தியா ராகம்: வெற்றியை தனதாக்கிய தனம்.. ரகுராமால் உடைந்து போன ஜானகி, நடந்தது என்ன

Sandhya Raagam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2024, 03:11 PM IST
  • சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்..
  • இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.
சந்தியா ராகம்: வெற்றியை தனதாக்கிய தனம்.. ரகுராமால் உடைந்து போன ஜானகி, நடந்தது என்ன title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சந்தியா ராகம்’ சீரியல்.

சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தனம் அப்பாவை பார்த்து மயங்க ரகுராம் என் பொண்ணு தோற்றதாக இருக்க கூடாது என்று சொல்லி பேட்மிட்டன் பேட்டை எடுத்து கொடுத்து விளையாட சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | மகாமுனி இயக்குனரின் அடுத்த படம்! மே 10ம் தேதி வெளியாகும் ரசவாதி!

அதாவது, ரகுராம் சொன்ன வார்த்தையால் எல்லாரும் உற்சாகமடைய தனமும் மிகுந்த சந்தோசத்துடன் விளையாட தொடங்குகிறாள், அதிரடியாக விளையாடி வெற்றியையும் தனதாக்க எல்லாரும் சந்தோசப்படுகின்றனர், தனம் தன்னுடைய அப்பா கையால் கோப்பையை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட ரகுராம் தனது கையால் பரிசு கொடுத்து பெருமிதம் கொள்கிறார். 

இதெல்லாம் முடிந்த பிறகு என்ன தான் இருந்தாலும் நீங்க என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம், நான் கட்டுப்பாடோட இருக்க வேண்டும்னு தான் நினைகிறேன், அதற்காக உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கனும்னு நினைக்கல என்று சொல்லி பேசி வருத்தப்படுகிறார். கடைசி வரை ஜானகியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து நகர்ந்து செல்ல ஜானகி உடைந்து போகிறாள். 

அதான் தனத்தை ஏற்றுக்கிட்டாரே உங்க மேலயும் கோபம் இருக்காது என்று மற்றவர்கள் ஆறுதல் சொல்லியும் அதை ஏற்க முடியாமல் தவிக்கிறாள் ஜானகி. சீனு தனத்தை ஏற்று கொண்ட மாதிரி மாமா நம்முடைய காதலையும் ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கையில் காதல் குறித்து பேச முடிவு செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News